Header Ads



அமித்ஷாவுக்கு, அசாதுதீன் ஒவைஸி பதிலடி

''தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி எந்த கலந்துரையாடலும் நடக்காததால் அது தொடர்பாக எந்த விவாதமும் நடத்தத் தேவையில்லை. அமைச்சரவை கூட்டம் அல்லது நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதமும் நடக்காததால் இது குறித்த பிரதமர் மோதியின் கருத்து சரியானதே'' என உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இது குறித்து ட்வீட் பகிர்ந்துள்ள ஏ.ஐ. எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைஸி, "அமித் ஷா நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தான் டிசம்பர் 22 ஆம் தேதி பகிர்ந்த ட்வீட்டை ரி ட்வீட் செய்துள்ளார் ஒவைஸி. அதில் அமித் ஷா நாடாளுமன்றத்தில் என்.ஆர்.சி குறித்து பேசுகிறார். "அமித் ஷா இது உண்மையில் நீங்கள்தானா? இதில் என்.ஆர்.சி குறித்துதான் பேசப்படுகிறதா? உண்மையில் இது நாடாளுமன்றம் தானா?" என ஒவைஸி கேட்டுள்ளார்.

மேலும் அவர், என்.பி ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு)க்கும், என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும்) தொடர்பு இல்லை என்கிறீர்கள். ஆனால், அரசு இணையதளத்திலேயே என்.பி ஆர்தான் என்.ஆர்.சிக்காக முதல்படி என்று இருக்கிறதே?" என ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியின் நிலைப்பாடு குறித்து அமித் ஷா, ''சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று நாங்கள் கூறினால், ஒவைஸி அவர்கள் இல்லை, சூரியன் மேற்கே உதிக்கிறது என்று கூறுவார் எனக் கூறி இருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஒவைஸி, " சூரியன் எப்போதும் கிழக்கிலிருந்துதான் உதிக்கும். ஆனால், என்.ஆர்சி தொடர்பான உங்கள் கருத்திலும் நீங்கள் கூறிய இந்த உதாரணத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும்," என்றார்.

No comments

Powered by Blogger.