Header Ads



நாளை எனக்கும், கைவிலங்கு மாட்டுவார்கள் - ரணில்

சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் வரிசையில் நாளை எனக்கும் கைவிலங்கு மாட்டுவார்கள். எனினும், நீதியின் வழியில் அந்தக் கைவிலங்கை நாம் உடைத்தே தீருவோம். நாட்டு மக்களின் ஜனநாயக ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசு செயற்பட வேண்டும். அதைவிடுத்துவிட்டு காடையர்கள் போல் செயற்படுவதை இந்த அரசு உடன் நிறுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வெளிநாடு சென்ற ரணில், அங்கு சர்வதேச செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் அன்று எமது தலைமையில் இருந்த ஜனநாயக ஆட்சி இன்று புதிய அரசின் தலைமையில் காட்டாட்சியாக மாறிவிட்டது. ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்களை ஏதோ ஒருவகையில் பழிவாங்கும் விதத்தில் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இந்த நாட்டில் மீண்டும் உருவாகியுள்ள அராஜக ஆட்சி இல்லாதொழிக்கப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. சும்மா பொய்க்கு உளராதீர்கள்.அவர்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.அது உங்களுக்கும் தெரியும்.மக்கள் மடையர்கள் என நினைத்து கதைக்காதீர்கள்.உங்கள் அரசில் அவர்களை கப்பாற்றியவர்கள் நீங்கள்.அடுத்து நீங்கள் ஐ தே க வின் தலைவராக இருக்கவே அரசாங்கம் விரும்புகிறது.அப்போது தான் அவர்களுக்கு இலகுவாக மூன்றி இரண்டு ர்டுக்கலாம்.அதையும் செய்து விட்டே நீங்கள் தலைமைப் பதவியில் இருந்து விலகுவீர்கள்.அன்றிலிருந்து இன்று வரை ஐ தே க யில் இருக்கும் எங்களுக்கு இது தெரியாதா?

    ReplyDelete
  2. இவரைச் சிறையில் அடைத்து 100 வருடம் கடூழியச் சிறைத்தண்டனை நியமித்தால் இந்த நாட்டில் வாழும் அத்தனை குடிமகனும் சஜித் உற்பட மகிழ்ச்சியடைவார்கள். கட்சிக்கு மட்டுமன்றி தன்னை நம்பி வாழ்ந்த அரசியல் வாதிகளுக்கும் வெட்டும் கொத்தும் போட்டு இன்னமும் கட்சியின் தலைமையை விட்டுக் கொடுக்காத இந்த வீணாப் போன மூதேவிக்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் திட்டு பதுவா செய்கின்றனர். அதுவேறு மத்திய வங்கியைச் சூறையாடி இன்னமும் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளாது இந்த நாட்டின் நீதித்துறையையும் பொதுமக்களையும் கடைக்கு அனுப்பும் இந்த சைத்தானுக்கு இறைவன் சரியான தண்டனையை வழங்க வேண்டும் என நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.