Header Ads



சஜித் என்பவர் தூரநோக்கற்றவர்

சஜித் பிரேமதாச என்பவர் அரசியல் ரீதியாக தூரநோக்கற்ற தலைவர் என அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 

குருணாகல் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

யார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஆனாலும் இம்முறை தேர்தலில் வெற்றியடைய போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சஜித் பிரேமதாச கட்சித் தலைவர் ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆனாலும் அந்த கட்சிக்கு நல்ல தலைவர் ஒருவரை தெரிவு செய்ய இன்னும் பல காலம் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.