Header Ads



நாங்கள் எங்கு செல்வது..? கேணிநகரில் மக்கள் போராட்டம்


வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கேணிநகர் எல்லை வீதியில் வசிக்கும் பதினைந்து குடும்பங்களை நீதிமன்றத்தின் மூலம் பிரதேச செயலகத்தால் வெளியேறுமாறு கோரியதை கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1978ம் ஆண்டு குடியமர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அடிக்கடி இடம்பெயர்ந்து 2009ம் ஆண்டு தொடக்கம் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். 2012ம் ஆண்டு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடுத்து 2015.07.27ம் திகதி குடியிருப்பவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2016ம் ஆண்டு வாகரை பிரதேச செயலாளரால் மீண்டும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் பிரதேச செயலாளர் குறித்த குடியிருப்பாளர்களுடன் கலந்தாலோசித்து பிரச்சனைகளை தீர்க்கும் படி நீதிபதி தீர்ப்பு வழங்கியதாக கேணிநகர் எல்லை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பலகாலமாக குறித்த பகுதியில் பள்ளிவாயல் அமைத்து வசித்து வரும் எங்களை குடியிருப்பை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்தால் நாங்கள் எங்கு செல்வது. நாங்கள் வசித்து வரும் குடியிருப்பில் இருந்து வெளியேற முடியாது. ஆகவே எங்களை நிரந்தரமாக இங்கு வசிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரச அதிகாரிகள் பாரபட்சமின்றி எங்களை நாங்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வந்த குடியிருப்பில் நிரந்தரமாக குடியமர்த்தி சகல ஆவணங்களை வழங்கும் படி கேட்டுக் கொள்வதாக குறித்த குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

No comments

Powered by Blogger.