Header Ads



ஜனாதிபதி கோட்டாபய நாட்டுப்பற்றுள்ள தூதுவர்களை, நியமிப்பது குறித்து சந்தோசப்பட முடிகிறது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டுப் பற்றுள்ள தூதுவர்களை நியமித்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைவதா போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“ வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் ஆற்றிவரும் பணி தொடர்பில் திருப்தியடைய முடியாதுள்ளது. தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையோ, ஓய்வு பெற்ற அரச அதிகாரியையோ தூதுவர் சேவையில் அமர்த்தும் பணியையே இதுவரையில் நாட்டில் காணப்பட்ட அரசாங்கங்கள் அனைத்தும் செய்தது.

1948 சுதந்திரத்தின் பின்னர் ஒரு சில தூதுவர்களே நாட்டின் முன்னேற்றத்துக்காக பங்காற்றியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் தமது சுய லாபங்களுக்காக செயற்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டுப் பற்றுள்ள தூதுவர்களை நியமித்து வருவதையிட்டு சந்தோசப்பட முடிகிறது. நாட்டின் நற்பெயரையும், கௌரவத்தையும் சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களை நியமிக்க வேண்டும் ” என்றார்.

No comments

Powered by Blogger.