Header Ads



இனவாதமும், மதவாதமும் உருவெடுத்து பெரும்பான்மை மக்களின் அதிகூடியோர் ஒருபக்கம் தள்ளப்பட்டனர்

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகத்துக்கு பின்னடைவு ஏற்பட்ட போதும், அதனை சரி செய்து மீண்டும்  மக்கள் பணியை தீவிரப்படுத்துவோம்  என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் இன்று (01) இடம்பெற்ற பொதுமக்கள் ,ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கடந்த காலங்களில் எமது அரசியல் பயணம் வெற்றிகரமாக இடம்பெற்ற போதும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தடங்கல் ஏற்பட்டுள்ளது. சகல இனங்களையும் சமனாக மதிக்கின்ற, சமத்துவத்தை பேணுகின்ற, சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வேட்பாளராக சஜிதை இனங்கண்டோம். அவருக்கு ஆதரவுவளித்தோம். அவரின் வெற்றிக்காக நாடெங்கும் பரப்புரை செய்தோம். எனினும் நாம் அவரின் வெற்றிக்காக பாடுபட்ட போதும் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்தனால் அது கைகூடவில்லை. அதற்காக நாம் சோர்வடையவில்லை. சோர்வடையவும் மாட்டோம். துவண்டு போகவும் மாட்டோம். எமது அரசியல் எழுச்சி  எதிர்காலத்தில் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ‘

‘19வது  திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின்  அதிகாரம் குறைக்கப்படுள்ளது. பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் அதிகாரங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த திருத்தத்தினால் ஜனாதிபதி எந்தவோர் அமைச்சையும் தாம் விரும்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நினைத்த மாத்திரத்தில் வழங்க முடியாது.  அது மாத்திரமன்றி சாதாரண பொரும்பான்மை அதாவது 113 உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் கட்சியே ஆட்சியமைக்கும் அக் கட்சியில் இருந்தே பிரதமரும் தெரிவு செய்யப்படுவார். இதுவே தற்போதைய அரசியல் யதார்த்தமாகும்’.

எனவே  பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருக்கின்ற நான்கு  மாதங்களில் நாம் திட்டமிட்டு பணியாற்ற வேண்டியுள்ளது. 

வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் நாலாபக்கத்திலுள்ள சிறுபான்மை சமூகம் ஒருமித்து, ஒன்றுபட்டு வாக்களித்திருந்தது. எனினும் இனவாதமும் மதவாதமும் உருவெடுத்ததனால்  பெரும்பான்மை மக்களின் அதிகூடியோர் ஒரு பக்கம் தள்ளப்பட்டனர். இதுவே சிறுபான்மை சமூகத்தின் பின்னடைவுக்கு காரணமாயிற்று. எனினும் இந்த வாதங்களை தொடர்ந்தும் வைத்திருந்து நீண்ட காலத்துக்கு எவரும்  அரசியல் செய்ய முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

புல்மோட்டை மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூஃப் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான டாக்டர் ஹில்மி மொஹிடின்,   தெளபீக்  பதுர்தீன் நெளபர் இஷார்டின் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பிர்தெளஸ் தொகுத்து வழங்கினார் 

5 comments:

  1. INAWAATHA PECHUKALAYUM, MATHA
    WAATHA, PECHUKALAYUM, SHONDA
    VASHIKKAKA, MEDAYKALIL PAKIRANGAMAAHA
    PESHI, INAVATHATHAI VAITHU,
    ARASHIYAL SHEIUM, UNGALKKU,
    MUSLIMGAL, THAKUNDA PAADAM,
    PADIPPIPPAARKAL.

    ReplyDelete
  2. நீங்களும் இனவாதிகள்தான் இனரீதியான கட்சிகளை இந்தநாட்டிலே தோன்றிவித்து தனது இனத்துக்காக மட்டும் பேசி செயல்படுவதை இனவாதம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  3. CHAMPIKA RANAWAKA UDAYA MADIYIL UKKAANDUKONDU, YAARUKKU INAVAAZAM
    KATPIKKIRAAI. PETINVAATHI YAAR.

    ReplyDelete
  4. UNNUDAYA INDA POIKALUKKU
    EMAARUKINRA MUSLIMGAL IPPOTHU
    ILLAI,KALAVU EDUTHAVAN YAARAAKA
    IRUNDAALUM, THANDIKKA PADAVENDUM.
    PAYANDU NADUNGAVENDAAM???
    THANDANAI KALAVU SHEITHVANUKKE.
    ITHUTHAN ISLAM.!!!!

    ReplyDelete
  5. YES, brothers Imthiyas and Abul Hassen, you are both correct. With their FALSE propaganda, they made a "demon" out of HE. Gotabaya Rajapaksa since June 14th., 2014 since the Aluthgama, Dharga Town and Beruwela violence which was created by Patali Champika and Rajitha Seneratne. The reality is that they feared HE. Gotabaya Rajapaksa will bring them before the "RULE OF LAW" for all the corruption they had done. But the MANIFEST was clear that there will be "NO REVENGE POLITICS". Those Muslims who understood Sinhalese and tried to understand the "VISION" have voted with HE. Gotabaya Rajapaksa. The SLPP platform campaign was done exclusively in Sinhalese. That is why "The Mulim Voice" claims the Muslims voted "POTTUWA" also in a substantial way. A few gatherings did have tamil speakers. You have acknowledged this and it is helpull in bridging the gap between the Muslim voters and the majority community who feel we had let them down.
    Another election is expected soon, the general election, sometime in March/April 2020. The Muslim Vote Bank will be acting on their own again and it is time that the Muslim Vote Bank should have a UNITED VISION to work with. A vision to support the SLPP, accepting the present reality and looking into the future, Insha Allah.
    It is the opinion of the writer that a Muslim personality placed in your position by the blessings of God AllMighty Allah, in the centre of the HE.President Gotabaya Rajapaksa/Hon. PM. Mahinda Rajapaksa new government should come forward to launch a political campaign in the Eastern province and Muslim populated areas to bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". You have spoken about this news culture in the media too. It should be a culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians. This political force can then support the new government to be formed in 2020 with our Muslim representatives, as partners, Insha Allah.
    The need is to immediately call a "meeting for Unity" of all Muslim progressive and or others to gather together under a common leadership with you as the "CONVENER", to achive the above goals, Insha Allah, Alhamdulillah. I am sure that many Muslims, especially the Youth will join you in this mission. "The Muslim Voice" is willing to be a partner with you in the new political journey, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.