Header Ads



இதுவரை ஆற்றிய சேவைக்காக, பெருமிதம் கொள்கின்றேன் - சபாநாயகர்


சர்வதேசத்தின் நல்லபிப்ராயத்தினை இன்றைய பாராளுமன்றம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள இந்த அங்கிகாரத்தினை தெரிவு செய்யப்படவுள்ள புதிய சபாநாயகர் தொடர்ந்து  முன்னெடுத்து செல்ல வேண்டும் என சாபாநயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள்  பாராளுமன்றத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை காலமும் ஆற்றிய சேவைக்கு பெருமிதம் கொள்கின்றேன் என  சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று இடம் பெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பமான   எட்டாவது பாராளுமன்றத்தில் பொறுப்பாற்றியமையினை இட்டு  பெருமிதம் கொள்கின்றேன். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான   நடவடிக்கைகள்   இடைப்பட்ட காலத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன   என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது.

பாராளுமன்ற  குழுவின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட்டமை,  சர்வதேச  நாடுகளின்  பாராளுமன்றத்துடன் நல்லுறவினை பேணல், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அதன்  செயற்பாடுகள் பலப்படுத்தல், தகவல் அறியும் சட்டமூலம் மற்றும்  குடிமக்களின்   அடிப்படை உரிமைகளை  பாதுகாப்பதற்கான சட்டங்களை இயற்றுதல் பாராளுமன்ற குழு மற்றும்  தேசிய  நல்லிணக்கத்தை ஏற்படுத்த விசேட தெரிவு குழுவை நியமித்தல், பாராளுமன்ற குழுவின் செயற்பாடுகளில் ஊடகங்களுக்கு அனுமதி  வழங்கப்பட்டமை ஆகியவை சர்வதேசத்தின்  கவனத்தையும், நன்மதிப்பினையும் பெற்ற  பிரதான  விடயங்களாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.