Header Ads



முஸ்லீம் தலைவர்களும், அமைச்சுப் பதவிகளும்


- முஹம்மது நயீம் ஆதம்பாவா - 

இன்று முஸ்லிம்களில் ஒருசாரார் மத்தியில் கேட்கப்படும் கேள்வியானது முஸ்லிம்களுக்கு ஏன் அமைகிசுப்பதவிகள் கொடுக்கப்படவில்லயென்பதாகும், முஸ்லீம் சமூகம் இக்கேள்வியினைக் கேட்கவில்லை, ஏனெனில் இது எதிர்பார்க்கப்பட்டதுதான், இதற்கான பின்னணியென்னவென்று பார்க்கும்போது புதிய ஜனாதிபதி தீவிர பவுத்தவாதிகளென்போரால் உருவர்க்கப்பட்டவராகும் ஆகவே அவர்களது தேர்தல் மற்றும் தற்பாதுகாப்புக் கோஷங்களான முஸ்லீம் மற்றும் சிறுபான்மைக்கெதிரான உணர்வலைகளை பெரும்பான்மை மக்களிடத்தில் விதைத்து ஆட்ச்சிபீடமேறியிருப்பதால் அதன்பலாபலன்களை சிறிது காலமெனும் அவர்கள் அனுபவித்ததாகவேண்டும்.

கடந்த காலங்களில் முழு அமைச்சரவையில் 30 அமைச்சர்களாயின் அதில் நாலு அல்லது ஐந்துபேர் காணப்பட்டனராயினும் முஸ்லீம் சமூகத்திர்ட்க்குக் கிடைத்த பயன் மிகக்குறைவானதே, இவர்கள் செய்ய முடிந்த ஆகக்கூடியது ஒரு பத்து இருபதுபேருக்கு இணைப்பாளர் பதவிகள் அவர்களுக்கு சில வாகனங்கள் அதர்ட்க்கான சாரதிகள் மற்றும் சில தற்காலிக பதவிகளென அவர்களது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக் குரியதாகவும் கிடைக்கப்பெற்றிருக்கும், இந்த இந்த அமைச்சுப்பதவிகளினால் முஸ்லிம்கள் இந்தநாட்டினயே முழுமையாக ஆளுவதாகத்தான் பெரும்பான்மையினம் கருத்தியிருக்கும், அதனைவிட இப்பதவிகளுக்காக எதிர்பார்த்திருந்த பெரும்பான்மையின அரசியல்வாதிகள் இவர்கள் அதிக அமைச்சுகளை அபகரிப்பதை விரும்பியிருக்கவில்லை அதுவும் ஒருவகையில் முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து பிரிப்பதற்க்கொரு காரணியாகியியதெனலாம், இந்த அமைச்சுக்களால்  முஸ்லிம்களுக்குக் கிடைத்த கௌரவம், தொழில்வாய்ப்பு வரப்பிரசாதங்கள்தானென்ன? இவர்கள் இப்பதவியினைத்திறந்தபோது சமூகத்திர்ட்கும் இவர்களுக்கும் கிடைத்த கௌரவம் உண்மையில் அதிகமே ! 

இந்த அமைச்சர்களொன்றும் சமூக சிந்தனை வாதிகளான பதியுதீன் மஹ்மூதாக பல நூறு ஆசிரியர் பதவிகளையோ, ஏ சீ எஸ் ஹமீதாக பல லட்சம் வெளிநாட்டு வேலை வாப்பினையோ, அஷ்ரபாக பல ஆயிரம் தொழிலும் பல்கலைக்கழகமும் பெற்றுக்கொடுத்தவர்களில்லையே !  இருப்பினும் அமைச்சரவைக்குள் எம்மவரிருப்பதனால் எமக்கெதிராக அமைச்சரவை சட்டபூர்வமாக தீர்மானங்கெளெடுப்பதற்கு முன்நிற்க்காது, இப்போது யாருமில்லையேயென்று எல்லோருமே தட்டிப்பணியவைக்க முற்ட்படுவார்கள் இதுவொரு துரதிஷ்டவசமான நிகழ்வாகும்.

எவ்வாறாயினும் பெரும்பான்மையினர் இதைத்தான் விரும்புகின்றனரென்றால் சிலகாலம் முஸ்லிம்கள் அமைச்சுப்பதவிகளைப்பெறாமல் இருப்பதுநான் சமூகத்திர்ட்கும் கட்சிக்கும் கௌரவமாகும், ஆனால் அது புத்திசாலித்தனமான முடிவில்லாமலிருக்கலாம் ஏனெனில் தலைவர்களைத் தவிர ஏனையோர் கட்சிப்பாய்ந்துவிடுவர்.    

புதிய ஜனாதிபதி அநேகமாக முஸ்லீம் அரேபிய முதலீடு மற்றும் வெளிநாட்டு அமுக்கங்களினால் உந்தப்பட்டு ஒரு நடுநிலைப்போக்கினைக் கடைப்பிடிக்க வேண்டி வரும்போது மீண்டும் பவுத்த தீவிர போக்குள்ளவர்களின் அட்டகாசம் அதிகரிக்கலாம், அதர்ட்க்காக புதிய ஜனாதிபதி சிலகாலம் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை உடனடியாக முன்னெடுக்கலாம் அல்லது தந்திரோபாய ரீதியாக அவ்வாறான திட்ட்ங்களை பிற்போடலாம், எது எவ்வாறாயினும் முஸ்லீம் கட்சிகள் சிலகாலத்திர்ட்க்கு ஒட்டி உறவாடுவது மிகக்கடினமே அல்லது பெரிய விலைகளை இவர்கள் கொடுக்கவேண்டி வரலாம், உதாரணமாக முஸ்லீம் காங்கிரஸ் கடந்த ராஜபக்ச ஆட்ச்சியில் அரசியலமைப்புத்திருத்ததிர்ட்க்கு கண்ணைமூடி ஆதரவளித்ததுபோன்ற ஆதரவு என்பன ஒரு புரிந்துணர்விட்கு வெளியேற்ட்படுத்தலாம். இது சிலநேரங்களில் அரசியலமைப்பினை தொகுதிவாரி தேர்தல் முறைக்கு மாற்றுவதட்கும்  முயற்ச்சிக்கலாம், ஆகவே இனிவரும் காலங்களில் முஸ்லீம் கட்சிகளினதும் முஸ்லீம் சமூக ஒற்றுமையிலுமே எதிர்காலம் தங்கியிருக்கும்.  

5 comments:

  1. சிறந்ததொரு ஆக்கம். நன்றி.
    முஸ்லிம்களுக்கு தனிக் கட்சி அவசியமில்லை. குறிப்பாக முஸ்லிம்களை அடகு வைக்கும் ஹக்கீமும் றிசாத்தும் வேண்டவே வேண்டாம்.
    தமிழர்கள் போன்று தனி வழி போகாது சிங்கள மக்களுடன் இணைந்து சென்றால் இருக்கின்ற உரிமைகள், சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அத்தனையையும் உறுதிப்படுத்தலாம்.

    ReplyDelete
  2. Politicians not for politics now....they are becoming politicians for earning purpose only.....

    ReplyDelete
  3. அஷ்ரபின் அரசியலால் முஸ்லீம்கள் வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். தமிழ் மக்கள் தமிழர் விடுதலை கூட்டணி என்ற கட்சியால்தான் பல வருட யுத்த அழிவுகளுக்கு முகம் கொடுத்தார்கள். இந்த சிறுபான்மை கட்சிகள் இல்லாமல் இருந்திருந்தால் இனத்துவேசம் இந்த நாட்டில் இல்லாமல் எல்லோரும் இலங்கையர்கள் என்ற ஒரே அடையாளத்தோடு ஒற்றுமையாக இருந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. Wich A C S HAMEED BADIUDEEN MAHMOOD AND OTHER PAST MUSLIM LEADERS COOPERATE AND FRIENDLY WORK WITH SINHALA LEADERS.

    ReplyDelete
  5. PLS THIS IS THE TIME WE NEED TO BE SOLID PLS DEAR UMMA DONT SEPARATE FOR YOUR INDIVIDUAL AGENDA

    ReplyDelete

Powered by Blogger.