Header Ads



குளவிக் கூட்டிற்கு கல்லெறிய அனுமதிக்க வேண்டாம், ஒரு முதிய அரசியல்வாதியின் நல்லாலோசனையாக ஏற்றுக்கொள்ளவும்

தேசிய கீதம் ஒவ்வொருவரும் தமது தாய் நாட்டைப் புகழ்ந்து பாடும் பாடலாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும்,

தாங்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின் தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதமாகும்.

பிரச்சினைகளுக்குரிய விடயங்களில் நான் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

விளைவுகளை பற்றி சிந்திக்காத சிலர் திட்டமிட்டு குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

தேசிய கீதம் ஒவ்வொருவரும் தமது தாய்நாட்டைப் புகழ்ந்து பாடும் பாடலாகும்.

எவரையேனும் குளவிக் கூட்டிற்கு கல்லெறிய அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

மனசாட்சி உள்ள எவரேனும் இந்த விடயத்தில் தலையிட மாட்டார்கள்.

ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழியில் தமது தாய்நாட்டை புகழ்ந்து பாடுவதையே விரும்புவார்கள்.

அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையுமாகும்.

குறிப்பிட்ட ஒரு மொழியில் பாடவேண்டும் என வற்புறுத்துவது, எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

தமிழ் பேசும் மாணவர்கள் தமக்கு தெரிந்த மொழியில் மனப்பாடம் செய்து வைத்துள்ளார்கள்.

தங்களை சங்கடப்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை, ஒரு முதிய அரசியல்வாதியின் நல்லாலோசனையாக ஏற்றுக் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. Good point
    or we will sing cinema songs on independent day

    ReplyDelete
  2. One country one national anthem not in tamil like in india

    ReplyDelete
  3. One country one national anthem not in tamil like in india

    ReplyDelete
  4. இந்த கிழடுகளின் அறிக்கையெல்லாம் ஜனாதிபதி வீட்டு குப்பை தொட்டியில் தான் இருக்கும். we don't need Tamil anthem it's enough only in sinhala

    ReplyDelete
  5. அஜன், விசர் பிடித்தால் நாயும் பாட்டுப்பாடும். ஆனால் மொழி புரியாது.நீரும் எதையாவது பாடும்.நாங்கள் எமது நாட்டு தேசியக் கீதத்தை சிங்கள மொழியில் பாடுவோம்.அதனை உறுதியும் செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.