Header Ads



களுபோவில வைத்தியசாலைக்கு அருகில், ஜனாதிபதி கோட்டாபய பயணித்தபோது...!

களுபோவில வைத்தியசாலைக்கு எதிரிலுள்ள நுழைவாயில் இரு மருங்கிலும் நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருவோர் குறிப்பிட்ட பார்வையிடும் நேரம் வரையில் அங்கு காத்து நிற்கின்றனர். 

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் அந்த வீதி அருகில் காத்திருக்கும் நிலை நிலவி வருகின்றது. 

3 தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ் வழியாக பயணித்த போது இதனை கவனத்தில் கொண்டார். 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் முன்னாள் நகர முதல்வர் தனஸ்ரீ அமரதுங்கவிற்கு இது குறித்து அறிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து அவர் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் கட்டிட பிரிவின் அதிகாரிகள் இந்த வைத்தியசாலையை பார்வையிட்டுள்ளனர். 

இதற்கமைய தற்பொழுது அங்கு தற்காலிக நடவடிக்கையாக அமர்ந்திருப்பதற்கென இரும்பினால் செய்யப்பட்ட இருக்கைகளை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மழை மற்றும் வெயிலினால் பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வைத்தியசாலைகளில் இடம்பெறும் கட்டிட நிர்மாண பணிகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


2 comments:

  1. தொந்தரவின்றி மக்களுக்கு வாழமுடியுமாக இருந்தால் குழப்பமற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்ற ஜனாதிபதியின் கொள்கையின் நடைமுறைச் சாத்தியப்பாட்டை பார்ப்போம். இது வரை பயந்த அளவுக்கு ஒன்றும் நடக்கவில்லை போலிருக்கிறது.

    ReplyDelete
  2. Nice to hear.
    Congratulations.

    ReplyDelete

Powered by Blogger.