Header Ads



ஜூனில் மாகாணசபை தேர்தலை நடத்தத் திட்டம்

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டு வரும் ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னைகோன் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் காலம் தாழ்த்தாமல் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் மாலை அமைச்சில் நடைபெற்ற அனர்த்த நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டத்தின் போதே இத்தகவலை அவர் வெளியிட்டார்.

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழையமுறையில் விகிதாசார அடிப்படையில் நடத்துவதற்கு ஜனாதிபதியும் உடன்பட்டிருக்கின்றார்.

இதற்கமைய விரைவில் பாராளுமன்றம் கூடும் போது திருத்தத்தைக் கொண்டுவரவிருக்கின்றோம். புதிய முறையில் நடத்துவதற்கு எல்லை நிர்ணய அறிக்கை பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த நிலையில் பழைய முறையிலாவது தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் இதனை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜனகபண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

இதற்கமைய அரசாங்கத்தின் நான்கரையாண்டுகால நிறைவுடன் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி நாட்டம் கொண்டிருக்கின்றார் எனவும் முதலில் பாராளுமன்றத்தேர்தலை நடத்திவிட்டு ஜூன் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

1 comment:

  1. மாகாண சபை தேர்தல்..,.? இந்தியா ஈன்றெடுத்த பிள்ளையை நாம் வளர்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டது.
    இதனை மேலும் தொடராமல் மத்தியில் செங்கோல் ஆட்சி நடத்தப்படும் போதும் மேலதிக செலவு மற்றும் நிர்வாக சிக்கல்களை தவிர்த்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லலாம்.

    ReplyDelete

Powered by Blogger.