Header Ads



மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற செயற்படுவது கடமையாகும் - ஜனாதிபதி

மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் செயற்படுவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த நோக்கத்தை அடைய நகர சபைகள், பிரதேச சபைகளின் செயற்பாடுகள் காலத்தின் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதிக்கும், உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விசேடமான வெற்றியை தேடி கொடுத்த மக்களின் எதிர்பார்ப்பை அதே விதத்தில் நிறைவேற்றுவது தனக்கும் உள்ளூராட்சி பிரதானிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள சவாலான பொறுப்பு. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது சகலரதும் கடமை.

குப்பைகளை அகற்றுவது முதல் பொருளாதாரத்தை மேம்படுத்த உயர் இடங்கள் செயற்படும் விதத்தை மக்கள் மிகவும் தேவையுடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றும் போது மக்களை துயரங்களுக்கு உள்ளாக்க கூடாது.

வினைதிறனான மற்றும் மக்களுக்கான அரச சேவையை உறுதிப்படுத்துவது அரச ஊழியர்களின் கடமை. அரச சேவை ஊழலற்றதாக இருக்க வேண்டும்.

நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டு சென்று, பொருளாதாரத்தை வலுவாக கட்டியெழுப்பி வந்த நேரத்தில் 2015 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் தோல்வியடைந்தது.

மக்கள் அன்று அரசாங்கத்தை நிராகரிக்க காரணமாக விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் கிடைத்த வெற்றியை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.