Header Ads



மகிந்த ராஜபக்ச பெயரில் விமான நிலையம், இருந்ததினால் என்ன செய்தார்கள் தெரியுமா..?

நாட்டின் அபிவிருத்திக்காக மத்தள விமான நிலையத்தின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -06- நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்த விமான நிலையத்திற்கு மக்களின் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்துக்கொள்ளவில்லை.

கடந்த அரசாங்கம் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் மகிந்த ராஜபக்ச பெயரில் அந்த விமான நிலையம் இருந்த கோபத்தினால், விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தியது.

10 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு. கட்டுநாயக்க விமானம் இதற்கு போதுமானதல்ல.

ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதால், மத்தள விமான நிலையத்திற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.

விமான பயணிகளுக்கு இலகுவாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்புக்கு செல்ல முடியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.