Header Ads



நாட்டிற்கு கிடைத்த, அதிர்ஷ்டமே ராஜபக்ச குடும்பம் - அதனை ஆசிர்வாதிக்கவே மழை

முதற்தடவையாக நாட்டிற்கு அவசியமான சிங்கள பௌத்த தலைவர் ஒருவரை தெரிவுசெய்தற்காக பௌத்த தேரர்களும் வாக்களிப்பில் கலந்துகொண்டார்கள் என அஸ்கிரியப் பீடத்தின் துணைநாயக்கர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

டீ.ஏ. ராஜபக்சவின் நினைவுத்தூபியை அமைத்த போது மோசடி இடம்பெற்றதாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அவர் தூபி அமைத்தது தவறில்லை என்ற இடத்திலேயே பௌத்த பிக்குமார்களும் இருப்பதாக துணைநாயக்கர் வெடருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபத்தனாராமய புராதன விகாரையின் விகாராதிபதி உடகம ஸ்ரீ தம்மானந்த தலைமைத் தேரரின் 80வது ஜனன தினத்தை முன்னிட்டு விசேட தானநிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேரர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பௌத்த தேரர்கள் என்பர்கள் கட்சி சார்பற்றவர்களாக இருப்பார்கள். இருந்த போதிலும் நாட்டை நல்வழிப்படுத்துவதற்கான வழிகாட்டலுக்கான கடமை அவர்களுக்கு உண்டு.

இந்த நாட்டிற்கு நல்ல தலைவர் அவசியம் என்றும் அதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிகால நிறைவின்போது குறிப்பிட்டிருந்தார்.

நாடு செல்லும் வழியைப் பார்த்தால் பயங்கரமானதாக இருக்கிறது என்பதால் பௌத்த மகாநாயக்க தேரர்களும், பிக்குகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்யையையும் அவர் முன்வைத்திருந்தார்.

அதன் பிரதிபலனை இன்று அனுபவிக்கின்றோம். ஆகவே சிங்கள பௌத்தன் என்ற வகையில் மக்களும், கோட்டபாய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் வெற்றிபெற்றோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஏனைய இனத்தவர்களையும் சேர்த்துக்கொண்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டிய தேவை தற்போது இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவுக்கு இருக்கின்ற அதே உரிமை டீ.ஏ ராஜபக்சவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் இருக்கின்றது.

ஆகவேதான் இன்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக மஹிந்த ராஜபக்ச, அமைச்சராக அவரது நெருங்கிய உறவினர் சமல் ராஜபக்ச, பிள்ளைகளும் சரியான தரததில் இருக்கின்றார்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியான குடும்பம் மிகவும் அதிர்ஷ்டமாக நாட்டிற்கு அமைந்திருக்கின்றது. தேர்தல் முடிந்த கையுடன் நவம்பர் 16ம் திகதி மழை கொட்டித்தீர்த்தது. அதுவும் ஓர் ஆசிர்வாதமாகவே நினைக்கின்றோம்.

ஆகவே டீ.ஏ. ராஜபக்சவுக்கு அமைத்த நினைவுத்தூபியை குற்றம் மற்றும் மோசடி என யார் கூறினாலும் அதனை அமைத்தவரும், அந்த தூபியமைப்பு தேவையும் சரியானது என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்” என கூறியுள்ளார்.

3 comments:

  1. That means: Ranil, Mithiri, Chandirika, Premadasa,JR, Premadasa belong to Muslim Community

    ReplyDelete
  2. Maare kalam naan janathipathe aanaalum malai paiumda muttal motta

    ReplyDelete
  3. மழையால் அழிவுகள் ஏற்பட்டிருப்பது சஜித் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதால் இருக்குமோ?

    ReplyDelete

Powered by Blogger.