Header Ads



மூவின மக்களையும் அரவணைத்து, பயணிப்பது எங்களின் நோக்கம் - மஹிந்த

இலங்கையில் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற, அவர்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் நாம் முன்வைக்கவோ அல்லது வழங்கவோ முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகமொன்று கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"13ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல விடயங்களைச் செயற்படுத்த முடியாது. நாங்கள், எங்களுடைய நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் இல்லாத வகையில், பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற, அவர்களின் அனுமதியுடனான தீர்வைத்தான் முன்வைக்க முடியும்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக தட்டிக் கழிப்பது எங்களின் நோக்கமல்ல. அதை முழுமையாகவும் நடைமுறைப்படுத்தமாட்டோம்.

ஒவ்வொரு நாடும் எங்களுக்கு அழுத்தங்களை, பரிந்துரைகளை வழங்கும். எனினும் எல்லாவற்றுக்கும் நாம் அடிபணிய முடியாது.

எங்களுடைய செயற்பாடுகள் நாட்டின் நலன்கருதியதாகவே இருக்கும். மூவின மக்களையும் அரவணைத்துப் பயணிப்பது எங்களின் நோக்கம். எங்களின் செயற்திட்டங்களை இன்னும் சில மாதங்களில் மக்கள் உணர்வார்கள்" - என்றார்.

2 comments:

  1. உங்கள் எண்ணத்தை இறைவன் நஸிபாக்குவானாக

    ReplyDelete
  2. சேற்றில் நட்ட கம்பு பல திசைகளை நோக்கி ஆடுகிறது. அதற்கு நிச்சியம் நிலையான இருப்பு கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.