Header Ads



"சம்பிக்கவின் கைது தொடர்பில், அவருடைய முன்னாள் சகா தெரிவித்துள்ளவை"

நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவதால், நாடாளுமன்ற அதிகாரங்களோ சிறப்புரிமை சட்டமோ மீறப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்படும் போது அது குறித்து சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பில் இன்று -20- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,

நாட்டின் சட்டம் தெரியாத ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி குற்றம் சுமத்துகின்றனர். சபாநாயகருக்கு தெரியப்படுத்தாமல், வீட்டுக்கு வந்து கைது செய்தமை, நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறலாம்.

நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் சிறப்புரிமை சட்டம். நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள உறுப்பினர் ஒருவரை கைது செய்தால் மட்டுமே சிறப்புரிமை மீறலாகும்.

வீட்டில் இருந்த சம்பிக்க ரணவக்கவை கைது செய்தது நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல் அல்ல. பிடியாணை இல்லாமல் கைது செய்ய வந்தார்களாம். பிடியாணை விட சட்டமா அதிபரின் ஆலோசனை பலமிக்கது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.