Header Ads



புலனாய்வு மதிப்பீட்டு அடிப்படையிலேயே, ரணிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குரிய பாதுகாப்பு ஊழியர் எண்ணிக்கை தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்றவாறு பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எனவே எந்தவொரு அரசியல்வாதியாக இருப்பினும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாதுகாப்புப் பிரிவும், புலனாய்வுப் பிரிவும் இணைந்து  ஆராய்வு மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டும்.  

அவர்களால் வழங்கப்படத்தக்க மதிப்பீட்டின் அடிப்படையில் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.  

அச்சந்திப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதுகுறித்து அமைச்சரவையில் ஏதேனும் தீர்மானங்கள்  மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.