Header Ads



அடுத்த இலக்கு யாரென, நாம் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றோம் - சஜித்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அரசியல் பழிவாங்கல் தொடர்கின்றது. இந்த நிகழ்ச்சி நிரலில் அடுத்த இலக்காக இருப்பவர் யார் என்று நாம் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பொய் கூறினார் என்று குற்றம்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

சம்பிக்க ரணவக்கவுக்குப் பின்னர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்படுவார் என்று எமக்கு ஏற்கனவே தெரியும். இது ராஜிதவுக்கும் தெரிந்த விடயம். அதுதான் அவர் முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது எதிர்வரும் 30ம் திகதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில், அதற்கிடையில் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டாபய அரசின் இந்தத் திட்டமிட்ட கைதுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பகிரங்கவாதம் மற்றும் பகிரங்க விசாரணை நடத்த இந்த அரசு ராஜிதவைப் பழிவாங்கும் நோக்கில் கைது செய்துள்ளது.

சட்டமா அதிபருக்கு இந்த அரசு மறைமுகமாகக் கொடுத்த அழுத்தத்தின் பிரகாரம் தான் ராஜிதவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. எனினும், வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் நடுநிலையுடன் நீதியை வழங்கும். அந்த நல்ல தீர்ப்புக்காக நாம் காத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.