Header Ads



பதிய அரசுக்கு போதியளவு காலத்தை வழங்க வேண்டும், நாங்கள் வீதியில் இறங்கினால் மக்கள் மனநிலை சரியில்லை என்பார்கள்

புதிய அரசாங்கத்துக்கு அவர்களின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவான காலம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்ப்பு இன்றி, சந்தர்ப்பவாத பிரச்சினைகளில் தலையிடுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “புதிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதனை விடுத்து, நாங்கள் வீதியில் இறக்கி கோஷமிட்டால் மக்கள் எம்மீதே குறை கூறுவார்கள்.

ஆட்சியாளர்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிகின்றதா இல்லையா என்பது தொடர்பில் மக்கள் புரிந்துகொள்ள இடமளிக்க வேண்டும்.

மக்களே ஆட்சியாளர்களை வாபஸ் பெறுமாறு கோரிக்கை விடுக்கும் வரை நாங்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் அவ்வளவு பலமிக்கதாக இருக்காது என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

மக்களின் விருப்பம் வரும்போது, அவர்களின் நோக்கங்களுக்காக தலையிட்டு தலைமைத்துவம் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். 

மக்களுக்கு தேவை ஏற்படாத நிலையில் நாங்கள் வீதிகளில் இறங்கினால் எங்களை மனநிலை சரியில்லாதவர்கள் என்றே மக்கள் நினைப்பார்கள்” என்றார்.

No comments

Powered by Blogger.