Header Ads



அடிப்படைவாதிகள் இல்லாத, அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - கெஹெலிய

ஜனாதிபதித் தேர்தலின் பின் அடிப்படைவாதிகள் இல்லாத அரசாங்கத்தை அமைத்துள்ளதாகவும், பொதுத் தேர்தலிலும் அடிப்படைவாதிகள் அற்ற நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும் எனவும் அப்படி நடக்காது போனால் அரசியலில் இருந்து விடை பெற தயாராக இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றாலும் தாம் அனைத்து இனங்கள், மதங்களையும் மதிக்கின்றோம்.

எனினும் இனிமேல் அடிப்படைவாதத்திற்கு இடமில்லை. கடந்த காலங்கள் முழுவதும் நாட்டின் அரசியலில் இருந்து வந்த அடிப்படைவாதத்திற்கு எதிர்காலத்தில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு ஒன்றை கட்டியெழுப்பும் போது அதற்கு தடையானவற்றை அடியோடு கிள்ளி எறிய வேண்டும்.

இதனடிப்படையில் அடிப்படைவாதத்தை முளையில் கிள்ளி எறிய வேண்டும். அடிப்படைவாதிகள் அற்ற அரசாங்கத்தை அமைக்க மக்கள் அணித்திரண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துள்ளனர். அந்த காலத்தில் இரண்டு அமைச்சர்களின் சகோதரர்கள் இருவர் இணைந்து சிறு ஏற்றுமதி பொருளாதாரத்தை அழித்தனர்.

மீள் ஏற்றுமதி பொருளாதாரம் காரணமாக சிறு ஏற்றுமதி அழித்து போனதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. அமைச்சர் அவர்கள் வெளிப்படையாக ஹக்கீமும் றிசாத்தும் இல்லாத அரசாங்கம் என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருக்கும். சமூகத்தையே விற்றுப் பிழைப்பு நடத்திய பெருச்சாளிகள்.
    சமூகத்திற்கு தலைக் குனிவை ஏற்படுத்திய அரசியல் பிண்ணாக்குகள்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. இவ்வாறு சிங்கள மக்களை ஏமாற்றும் அரசியல் தந்திரம் உங்களால் மாத்திரமே செய்ய முடியும்.

    ReplyDelete
  3. நீங்களே அடிப்படைவாதிதானே பிறகு?

    ReplyDelete
  4. @Ajan...what about the TNA then.a ha ha lol

    ReplyDelete
  5. இந்த பொது தேர்தலில் விளங்கும் ரிசாட் ஹகீம் மின் தேவை.

    ReplyDelete
  6. "முஸ்லிம்களை அரசில் சேர்த்தால் சிங்களவர்களின் வாக்குகளை கோட்டா இழப்பார்" என்பது தான் தற்போது உள்ள அரசில் நிலவரம்

    ReplyDelete
  7. ගරු රාජ්‍ය අමාත්‍ය තූමා පසුගිය කාලයේ,ඉස්ලාම් විරෝධී කුරිරු අන්තවාදි ත්‍රස්තවාදි සහරාන් කල්ලියට මාස්පතා වැටුප් ගෙවූ අය ගැන පාර්ලිමේන්තුවේ ප්‍රකාශ කළ බව මාධ්‍යවල පළවී තිබුණා. දැනට,බෝම්බ ගැසීමේ සිද්ධිය පිළිබදව පරික්ෂණය පවත්වන ජනාධිපති කොමිසම ඉදිරියේ ස්වේච්ඡාවෙන් පෙනීසිටිමින් පාර්ලිමේන්තුවේ හෙළිකළ කරුණු පැහැදිලිව පාපොච්ඡාරණ කරන්නේනම්
    කොමිසමේ කාරියයන් ඉතා ඉක්මණින් පහසුෙවෙන් නිම කළ හැකිවනු අැත.

    ReplyDelete
  8. ගරු රාජ්‍ය අමාත්‍ය තූමා පසුගිය කාලයේ,ඉස්ලාම් විරෝධී කුරිරු අන්තවාදි ත්‍රස්තවාදි සහරාන් කල්ලියට මාස්පතා වැටුප් ගෙවූ අය ගැන පාර්ලිමේන්තුවේ ප්‍රකාශ කළ බව මාධ්‍යවල පළවී තිබුණා. දැනට,බෝම්බ ගැසීමේ සිද්ධිය පිළිබදව පරික්ෂණය පවත්වන ජනාධිපති කොමිසම ඉදිරියේ ස්වේච්ඡාවෙන් පෙනීසිටිමින් පාර්ලිමේන්තුවේ හෙළිකළ කරුණු පැහැදිලිව පාපොච්ඡාරණ කරන්නේනම්
    කොමිසමේ කාරියයන් ඉතා ඉක්මණින් පහසුෙවෙන් නිම කළ හැකිවනු අැත.

    ReplyDelete

Powered by Blogger.