Header Ads



அடிப்­ப­டை­வாத சிறிய கட்­சி­களின் பிடிக்குள் சிக்­காது, தனிக்­கட்­சி­யாக அர­சாங்கம் அமைக்க ­வேண்டும்

அடிப்­ப­டை­வாத சிறிய கட்­சி­களின் பிடிக்குள் சிக்­கி­வி­டாமல் தனிக்­கட்­சி­யாக அர­சாங்கம் அமைக்கத் தேவை­யான சக்­தியை பொதுத் தேர்­தலில் பெற­வேண்டும். அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் போன்று நாங்கள் ஒரு­போதும் வெளி­நாட்டு சக்­தி­களின் தேவைக்­கேற்ற முறையில் செயற்­ப­ட­மாட்­டோ­மென நீதி, மனித உரி­மைகள், சட்ட மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

வெலி­மட பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தேர்­தலில் நாங்கள் மாத்­திரம் வெற்­றி­பெ­ற­வில்லை. நாடும் வெற்­றி­பெற்­றது. பாது­காப்­பற்ற நிலை­யி­லி­ருந்த நாடு பாது­காப்­பான நாடாகத் தற்­போது மாறி­யி­ருக்­கின்­றது. பெளத்த தர்­மத்­துக்கும் பாது­காப்­பற்ற நிலையே இருந்­தது. கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்­றி­பெற்­றி­ருக்­கா­விட்டால் என்ன நடந்­தி­ருக்கும் என்று நினைத்­துப்­பார்க்­க­வேண்டும். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் முன்­னு­தா­ர­ண­மாக பொதுச்­சொத்­துக்கள் வீண் விர­ய­மா­காமல் பாரிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றார்.

அத்­துடன் அடுத்த வருடம் மார்ச் 3ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும்.ஏப்ரல் இறு­தியில் பொதுத் தேர்தல் இடம்­பெ­றலாம். அதனால் நாங்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்­று­விட்­டோ­மென சும்மா இருந்­து­வி­ட­மு­டி­யாது. அத­னை­யும்­விட பாரிய பொறுப்பு தற்­போது எங்­க­ளுக்கு இருக்­கின்­றது. மிகவும் கஷ்­டத்­துக்கு மத்­தியில் பெற்­றுக்­கொண்­டுள்ள அர­சாங்­கத்தை பாது­காத்­துக்­கொள்ள வேண்டும். அடிப்­ப­டை­வாத சிறிய கட்­சி­களின் பிடிக்குள் சிக்­கி­வி­டாமல் நாங்கள் தனி அர­சியல் கட்­சி­யாக இருந்து அர­சாங்கம் செய்­ய­வேண்டும். நம் நாட்டின் எதிர்­கா­லத்­திற்கு நல்­லது இடம்­பெ­றாமல் சூழ்ந்­தி­ருந்த மேகங்கள் தற்­போது வில­கிச்­சென்­றுள்­ளன. அதனால் மீண்டும் ஒளி­வர வேண்­டிய நேரம் வந்­­துள்­ளது. அத்­துடன் உங்கள் பொரு­ளா­தாரம் சக்­தி­பெ­ற­வேண்டும். அதற்­காக நம் நாட்டு விவ­சா­யி­களை பாது­காக்­கும்­ வ­கையில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கிழங்கு, மா போன்­ற­வற்றை இறக்­கு­மதி செய்­வதை நிறுத்­த­வி­ருக்­கின்றோம். அது மாத்­தி­ர­மின்றி எமது நாட்டில் உற்­பத்தி செய்யும் அனைத்­து­வ­கை­யான பொருட்­க­ளையும் இறக்­கு­மதி செய்­வதை நிறுத்­த­வேண்டும்.

மேலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டை முன்­னேற்ற நிலைக்கு கொண்­டு­செல்ல நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றார். அதற்கு சர்­வ­தேச ரீதியில் எமக்கு உத­விகள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. என்­றாலும் நாங்கள் ஒரு­போதும் சர்­வ­தே­சத்­துக்கு அடி­ப­ணிந்து செல்­ல­மாட்டோம். ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துக்கு அடி­ப­ணிந்­தது. வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்கு முன்னால் தலை­கு­னிந்­தி­ருந்­தது. ஆனால் ஜனா­தி­ப­தியோ அர­சாங்­கமோ சர்­வ­தே­சத்­துக்கு முன்­னாலோ அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­னாலோ அல்­லது சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு முன்னால் ஒரு­போதும் தலை சாய்க்­க­மாட்டார்கள். இது எமது நாட்­டுக்கு கெள­ர­வ­மாகும். அத்­துடன் வெளி­நாட்டு சக்­தி­க­ளுக்கு தேவை­யான முறையில் செயற்படும் அரசாங்கத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதே கடந்த தேர்தலின்போது மக்க ளுக்குத் தேவையாக இருந்தது. அதனால் இந்த அரசாங்கம் வெளிநாட்டு சக்திகளுக்குத் தேவையான முறையில் செயற்படாமல் உறுதியாக தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்கமாகும். அதன் மூலம் தேசத்தின் மதிப்பை மேலோங்கச்செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.-Vidivelli

எம்.ஆர்.எம்.வஸீம்

No comments

Powered by Blogger.