Header Ads



கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தி தராவிட்டால் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி தராவிட்டால் அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நண்பகல் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் அடிப்படைத் தேவையாக தமிழ் பகுதிகளில் மூன்று பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் அவசியம் இருக்கின்றது.

புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்க வேண்டிய கடமைபாடுகளில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

பொத்துவில் பிரதேசத்தில் கோமதியை மையமாகக்கொண்டு ஒரு பிரதேச செயலகமும், சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தையை அடிப்படையாகக் கொண்ட பிரதேச செயலகங்களும் உருவாக்கப்பட வேண்டிய அவசியப்பாடு அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகிறது.

இதற்கு காரணம் எங்களது நிலம் ஆக்கிரமிக்கப்படுறது. எமது பொருளாதார வளம் சுரண்டப்படுகிறது. திட்டமிடப்பட்ட முறையில் ஏனைய சமூகங்களால் கலை, கலாசாரம் கல்வியை தேசியத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படும் போது தான் தன்னிறைவு பெற்ற சமூகமாக மாற்றம் பெறும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவற்காக நாங்கள் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வேண்டும் என கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

பல்வேறு அழுத்தங்களை கொடுத்தோம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தரமுயர்தி தருவதாக இறுதிவரை சொல்லி சொல்லி எங்களை ஏமாற்றி விட்டது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தவர். அந்த நேரம் செய்யாத விடயத்தை,சொல்லாத விடயத்தை இன்று கூக்குரலிட்டு திரிகின்றார். இன்று மக்களை திசை திருப்புகின்ற போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் பெரிய sensitive ஆன ஒன்றாக தற்காலத்தில் காணப்படுகின்றது. இதனை முடித்து வைப்பதற்கான ஒரே வழி நிலத்தொடர்பற்ற முறையிலான தமிழ் அல்லது முஸ்லிம் பிரதேச செயலகம் ஒன்றினை உருவாக்குவதுதான். கலமுனை பிரதேசம் நீண்டதும் அகண்டதுமானது. இங்கு பரம்பரையாக தமிழ் பேசும் முஸ்லிம்களும் இந்துக்களும் கிறிஸ்தவரகளும் மிகவும் அன்னியோன்மையாக வாழ்ந்து வருகின்றனர். அவரகளுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன். ஒவ்வொரு இனத்தவரகளுடைய பிரதேசங்களிலும் மற்ற இனம் உள்வருவது சாத்தியமானதுதான். அவற்றை விட்டுவிடுங்கள். எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வீணாக மக்களைக் குளப்ப வேண்டாம். கல்முனைப் பிரதேசத்தை இப்படித்தான் பிரிக்க வேண்டுமென்று அரசியல்ரீதியாக பேச எவருக்கும் உரிமை இல்லை. எனவே அரசுடன் இந்த விடயத்தில் இணைந்து சகலரும் விரும்பும்விதத்தில் கல்முனை பிரதேசத்தை கூறு போட்டால் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.

    ReplyDelete
  2. அதாஉல்லாஹ் அமைச்சராக இருந்த போது மிகவும் நேர்த்தியான திட்டம் ஒன்றை முன்வைத்தார். தனது ஈகோ அதற்கு இடம் தர மறுத்ததால் ஹரிசும் ஹக்கீமும் சேர்ந்து அதனை முறியடித்தனர்.
    இன்று ஆப்பு இழுத்த குரங்காகி விழி பிதுங்கி நற்கின்றனர். இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கோடீஸ்வரன் பிச்சைக்கார அரசியல் பிழைப்பு நடத்துகின்றார்.அதற்குள் பாசிசப் புலி கருணா புகுந்து கோடிக்கு தண்ணி காட்டுகிறார்.
    சபாஷ், நல்ல போட்டி.இயக்கத்தின் பேரால் அடித்துக் கொன்று குவித்த பாவிகள் தானே. இது ஒன்றும் புதிய விடயம் இல்லை.தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.