Header Ads



ஜனாதிபதியின் தீடீர், விஜயத்தினால் ஏற்பட்ட பலாபலன்


சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கான வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கான உரிய நேரத்தை அறிவிக்கும் குறுஞ் செய்தி முறையை (sms) அறிமுகப்படுத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் முடிவுசெய்துள்ளது. 

திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் உதவியுடன் இந்த நடைமுறையானது எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் உபாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று பிற்பகல் பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது குறித்த திணைக்களத்தினடமிருந்து சேவையை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்திய அவர், சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு அமைவாகவே மேற்கண்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.