Header Ads



சாதக பதில் கிடைக்காமல், ரணிலுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை - சஜித்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக ரணில் - சஜித் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்றை நடத்த கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தற்போது இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கை திரும்பியதும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

தற்போது நெருக்கடியாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிரித்து வரும் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் இறுதியான முயற்சி இது என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் அதனை நிராகரித்திருந்தார்.

தனது நிலைப்பாட்டை தான் தெரிவித்துள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைக்காமல் கட்சியின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை என்பது சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இறுதியில் கட்சியில் உள்ள சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள், சிரேஷ்ட பிரதிநிதிகளிடம் விடுத்த கோரிக்கையை அடுத்தே ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த சஜித் பிரேமதாச இணங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது போனால், இரண்டு தரப்பினரும் மாற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.