Header Ads



பரலோகம் சென்றுள்ள இனவாதி பிரபாகரனின் இடத்தை பெற, விக்னேஸ்வரன் தயாராகி வருகிறார்

இலங்கை பௌத்த நாடு அல்ல என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என காலி சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளனர்.

ஊடக சந்திப்பொன்றை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தினர் இதனைக் கூறியுள்ளனர்.

விக்னேஸ்வரனின் கருத்தை கண்டிப்பதாகவும், அமைதியாக இருக்கும் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டி யுத்தம் ஒன்றை ஏற்படுத்த முயற்சிக்கும் மூடதனமான கருத்து எனவும் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி பிரேமரத்ன திரானகம தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மிலேச்ச ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கருத்துக்களை வெளியிடாது அமைதி காத்த விக்னேஸ்வரன், நாட்டில் இனங்கள், மதங்கள் இடையில் உருவாகி வரும் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பௌத்த நாடு தொடர்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இல்லாமல் போயுள்ள தனது அரசியல் விம்பத்தை கட்டியெழுப்புவதற்காகவே அவர் இதனைக் கூறியுள்ளார் எனவும் பிரேமரத்ன திரானகம குறிப்பிட்டுள்ளார்.

பரலோகம் சென்றுள்ள இனவாதி பிரபாகரனின் இடத்தை பெற விக்னேஸ்வரன் தயாராகி வருகிறார் என சட்டத்தரணி ஜயந்த குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை தூண்டி எதிர்வரும் தேர்தலில் வாக்குகளை பெற முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அது மாத்திரமல்ல அமைதியான தமிழ் மக்கள் இந்த பொறியில் விழுவதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. தான் நீதிபதியாக இருந்த போது எவ்வித அடையாளங்களையும் பெற முடியவில்லை என்பதால், அரசியலில் புகழ் பெறுவதற்கு இடையிடையே இவ்வாறு கோமாளித் தனமாக அல்லது விசமத் தனமாக ஏதாவது உளறுவதை இந்த மாமா வாடிக்கையாக கொண்டுள்ளார்.
    எது எவ்வாறாயினும் இலங்கையை எப்போதுமே பதட்டமான சூழலில் வைத்திருப்பதையே விருப்பமாக்க் கொண்ட தமிழ் அரசியல் வாதிகளின் கனவு ஒருபோதும் நிஜம் பெறாது என்பதை உலகளவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் எடுத்துக்காட்டுகிறன.
    புண் உள்ள பிச்சைக்காரர்கள் போல் எப்போதுமே உரிமை என்ற கோசத்தை சர்வதேச சமூக சந்தையில் நிரம்பல் செய்ய முடியாத அளவிற்கு அவர்கள் அடையாளம் கண்டு விட்டார்கள்.
    எனவே மேலும் மேலும் பிணங்கிப் போவதை தவிர்த்து ஏனைய சமூகங்களோடு இணங்கிப் போகும் அரசியலில் ஈடுபட பழகிக் கொள்ள வேண்டும்.
    இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பெரும்பான்மையுடன் ஒன்றிணைந்த அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர். இது பற்றிய கற்கையும் அரசியல் மீள் வாசிப்பும் தமிழ் தலைவரகளுக்கு அவசியமாகி விட்டது.
    போதாக் குறைக்கு கருணா என்ற பாசிச புலியும் பதுங்கியிருந்து பாயப்பார்க்கிறது.அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று மீண்டும் உங்களையேவந்து சேரும்.இதனால் முதன்மையான பாதிப்பு தமிழர்களையே சென்றடையும்.

    ReplyDelete
  2. Try push uneducated tamil youth towards lifting arms . very worst person on this earth

    ReplyDelete

Powered by Blogger.