Header Ads



கிழக்கில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க, சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும் - கருணா

- பாறுக் ஷிஹான் -

கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் மாத்திரமே   தமிழ் மக்களை   பாதுகாக்கப்படுவர் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம்  பொத்துவில், கோமாரி, ஊரணி ,பகுதியில் உள்ள பெண்கள் சமாசம், விளையாட்டு கழகங்கள், இளைஞர்கள் அமைப்பு, உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான வெள்ளிக்கிழமை(13) மாலை 5 மணி முதல் 8 மணிவரை  இடம்பெற்ற  கலந்துரையாடலில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்கு இன்றியமையாதது . இளைஞர்கள் நாட்டிற்கு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க அபாரமாக செயற்பட்டனர். அது போன்றுதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒற்றுமையுடன் செயற்பட்டது மன மகிழ்ச்சியடைய வைத்தது.கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்துவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ என்னுடன்  பேசினார் . கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தி கொடுக்கபடும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் .அவர் கூறினால் நடக்கும் எந்த வித மாற்று கருத்திற்கும் இடமில்லை.எமது உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் எமது வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் . எதிர்வரும் தேர்தல்களில் எமது வாக்குகளை சரியாக பயன்படுத்துவோம். நாம் அமைச்சுபதவிகளில் இருந்தால்தான்    அதிகாரத்தை பயன்படுத்த முடியும் .அதன் மூலமே பயத்தை காட்ட முடியும்.

  அம்பாறைக்கு ஒரு தமிழ் அமைச்சர் கிடைக்கும் அப்போது தமிழர்களின் அபிவிருத்தியும்  எமது கையில் அதிகாரமும் கிடைக்கும்.இந்த நோக்கத்திற்க்காகவே சுதந்திர கட்சியின் பிரதித்தலைவர் பதவியை துறந்து மஹிந்தவிடம் கூறிவிட்டு வெளியேறினேன். அப்போதுதான்  தமிழ் மக்களுக்கான பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும் .தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு சென்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டு சென்ற 13 அம்ச கோரிக்கையை சஜீத் பிரமதாச தூக்கிஎறிந்துவிட்டார். மூன்று தினங்கள் தூங்கி எழும்பிய பின்னர் பணப்பரிமாற்றத்தை பெற்று கொண்டு சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்கள் சஜீத் பிரமதாசவை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தனர். நல்ல வேளை சஜித் பிரேமதாச வெற்றிபெறவில்லை வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் நிலை அபாயகரமாக இருந்திருக்கும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்றால் சிங்கள மக்களுடன் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால்    தமிழ் மக்களை அவர் பாதுகாத்து கொள்வார்.தமிழ் மக்களின் பாதுக்காப்பு வேலியாக நான் இருப்பேன் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது நான் உங்களுடன் இருந்து பாதுகாப்பேன் என குறிப்பிட்டார்.

3 comments:

  1. சும்மா போடா!

    ReplyDelete
  2. தமிழனில் கேடுகெட்ட தமிழன் நீர் என்பதை நாங்கள் சொல்லவில்லை. உலகத் தமிழர்கள் கூறுகின்றனர்.
    காட்டிக் கொடுத்த காவாலியே! இப்போது கூட்டிக் கொடுக்கிறாய்.அது உனது பிற்போடுள்ளது.
    அதற்காக ஏண்டா முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கிறாய்.நாய்க்கு எங்கு சென்றாலும் நக்குத் தண்ணிதான்.

    ReplyDelete
  3. தம்பி தமிழர்களின் போராட்டத்தைத் காட்டிக் கொடுத்து உழைத்தது போக இப்போ தமிழ் முஸ்லிம் இன முறுகலை ஏற்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சர்வதேச ரீதியில் தர்மசங்கடத்தையும் தலைகுனிவையும் ஏற்படுத்த முனைவதுடன் முஸ்லிம்களின் வாக்குக்களையும் கிடைக்காமல் தடுக்க முனைகின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.