Header Ads



யாழ்ப்பாணத்தில் இன்றிலிருந்து, சட்டவிரோத செயல்கள் நிறுத்தப்படும்

யாழ் மாவட்டத்தில் இன்றிலிருந்து பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை உதவியுடன் சட்டவிரோதமான செயல்கள் நிறுத்தப்படும் என மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார். 

இன்றைய தினம் -24- கடற்றொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கில் இடம்பெற்று வரும் மண் கொள்ளை வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் அத்தோடு போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை தடுத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டம் இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ்வரன் அன்றிலிருந்து பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். 

எனினும் பொது மக்கள் தமக்குரிய தகவல்களை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்ட அத்தோடு இன்றைய சந்திப்பின் போது பிரதேச சபை உறுப்பினர்கள் பலராலும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

யாழ் மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ் கருத்து தெரிவிக்கையில் அரியாலை பகுதியில் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் இடமாற்றம் செய்யும் பட்சத்தில் மணல் கடத்தல் காரர்களை இலகுவாக கைது செய்ய முடியும் என பொலிஸார் மீது குற்றம் சாட்டினார். 

அத்தோடு தான் இவ்வளவு காலத்தில் பலதரப்பட்ட முறைப்பாடுகளை பொலிஸாருக்கு தொலைபேசி மூலமும் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்திருந்தும் இன்றுவரை போதைப்பொருள் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எவையும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

அத்தோடு அங்கு கருத்துரைத்த மாநகரசபை உறுப்பினர் செல்வவடிவேல் பொலிஸாருக்கு நாம் தகவலை வழங்கும் போது அந்தத் தகவல் சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவருக்கு செல்கின்றது. 

எனவே பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க பயப்படுகிறார்கள். எனவே இவை அனைத்தையும் நாங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

2 comments:

Powered by Blogger.