Header Ads



ஹட்டனில் பச்சைநிற, பாம்பு கண்டு பிடிக்கப்பட்டது

- இரா.யோகேசன்   -

ஹட்டன் - மிட்போட் தோட்டம் ஒஸ்போன் பிரிவிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து, பச்சை நிறத்திலான பாம்பு ஒன்றை தொழிலாளர்கள் பிடித்துள்ளனர்.

மேற்படித்  தோட்டத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  பாம்பு இருப்பதைக் கண்டுள்ளனர்.

தற்போது தோட்டப்புறங்கள் காடாகி வருகின்றமை, தேயிலைச் செடிகளுக்கு உரிய பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களாலேயே, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தேயிலைச் செடிகளுக்குள் ஊடுறுவவதாகத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தேயிலைச் செடிகளுக்கு ஒப்பான நிறத்தில் பச்சை நிறத்திலேயே மேற்படி பாம்பு காணப்பட்டுள்ளது.

கடந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளார்.

அத்துடன் ஒஸ்போன் சுற்றுப்புறப் பகுதிகளில்,  கடந்த காலங்களில் பாற் பண்ணைக்காக புல் வெட்டுவதற்கு சென்ற பல தொழிலாளர்கள்,  பாம்பு கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகளோ, பாராமரிப்புகளோ அல்லது இடர் கடன் வசதிகளோ   நிர்வாகத்தால் உரிய வகையில் செய்து கொடுப்பதில்லை என கவலையும் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. Totha,makkalaku,uriya,pabukappi,walaggavum,iewarhal,iruppabal,than,naggal,tea,kubkkiram,pavm,iwrhal

    ReplyDelete

Powered by Blogger.