December 23, 2019

யார் இந்த, பாத்திமா சாலிஹா..?

- பீ.எப்.எம் றிஷாட்  -

மற்ற துறைகளைப் போல விளையாட்டுத்து றையிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அதிலும் இலங்கையைச் சேர்ந்த பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. அதுமாத்திரமின்றி இலங்கை முஸ்லிம் பெண்கள் விளையாட் டுத்துறையில் சாதிப்பது மிகவும் அரிது என்று சொல்லலாம். 

பொதுவாக பாகிஸ்தான், ஈரான் மற்றும் மலே ஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கலாசார ஆடையான ஹிஜாப் அணிந்து விளையாடுவதை அதிகம் பார்த்துள்ளோம். 

ஆனால் இலங்கையை போன்ற பெரும்பாண் மையாக சிங்கள மக்கள் வாழ்கின்ற நாடொன்றில் இருந்து முஸ்லிம் வீராங்கனையொருவர் ஹிஜாப் அணிந்து விளையாடியது இதுவே முதல்தடவை என்று சொல்லலாம்.

அதுவும், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலத்தில் சர்வதேசப் போட்டி யொன்றில் விளையாடி பதக்கம் வென்ற முதல் ஹிஜாப் அணிந்த வீராங்கனை பாத்திமா சாலிஹா இஸ்ஸடீன் என்றால் மிகையாகாது.

தெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விளையாட்டு விழா என்றழைக்கப்படும் தெற்காசிய விளை யாட்டு விழாவின் 13-ஆவது அத்தியாயம் கடந்த வாரம் நேபாளத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. 

கடந்த காலங்களைக் காட்டிலும் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிட்ட தமிழ் பேசுகின்ற வீரர்கள் தனிநபர் மற்றும் குழுநிலைப் போட்டிகளில் தமத திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை சுவீச ரித்திருந்தனர்.

இதில் குழு நிலைப் போட்டியான ஸ்குவாஷ், (SQUASH) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக ளில் இலங்கை அணி வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன், பெண் கள் அணியில் பாத்திமா  எலிஹா இஸ்ஸடீன், சமீரா ருக்சானாடீன் ஆகிய இரண்டு முஸ்லிம் வீராங்கனை கள் இடம்பிடித்தருந்தனர்.

இந்த வெற்றியுடன் பாத்திமா சலிஹாவின் பெயர் தான் அதிகளவில் பேசப்பட்டதுடன், போட் டியின் பின்னர் அவரு டைய புகைப்பட்டங்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வைரலாகப் பரவின. 

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் அவ ருக்கான வாழ்த்துக்களை அள்ளி அள்ளி வழங்கியிருந்தனர். அதற் குக் காரணம் பாத்திமா சலிஹா அணிந்த ஹிஜாப் தான்.

இலங்கையின் விளையாட்டுத் துறை வரலாற்றில் அண்மைக்காலத் தில் சர்வதேச போட்டியொன்றில் ஹிஜாப் அணிந்து கொண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக அவர் இடம்பிடித்தார்.

யார் இந்த பாத்திமா சாலிஹா..? 

பாத்திமா சலிஹாவின் தந்தை ஒரு வியாபாரி ஆவார். நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றார். அவருடைய தாய் ஓர் ஆசிரியை. கொழும்பில் உள்ள பிரபல பாடசர லையொன்றில் கற்பித்து வருகின் றார்.

அத்துடன், ஐந்து ஆண் பிள்ளைகளைக் கொண்ட வீட்டில் பாத்திமா சாலிஹா மட்டும் தான் ஒரேயொரு பெண் பிள்ளை . வீட்டில் செல்லப் பிள்ளையான அவர், சிறுவயது முதல் படிப்பைப் போல கல்வியிலும் அத்த திறமைகளை - வெளிப்படுத்தி வந்தார்.

பம்பலப்பிட்டி புனித கன்னி யோஸ் திரிகள் மடத்தில் கல்வி கற்ற பாத்திமா சாலிஹா, ஆரம்ப காலத்தில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், பிற்காலத்தில் தனது சகோதரர்களைப் பார்த்து ஸ்குவாஷ் விளையாட்டுக்கு மாறினார்.

அதிலும் குறிப்பாக பாத்திமா சலிஹாவின் ஐந்து சகோதரர்களும் ஸ்குவா விளையாடிய வீரர்கள் ஆவர். இதில் மூத்த சகோதரரான யாசிர் இஸ்ஸ டீமன் பொது | நலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவர்.

சாலிஹாவின் இரண்டாவது சகோதரர் யாகுப் இஸ்ஸடின் தேசிய நீச்சல் வீரர் ஆவார். அத்துடன், 3ஆவது மற்றும் 4ஆவது சகோதரர்களான யாசின், யூசுப் ஆகிய இருவ ரும் தேசிய கனிஷ்ட வீரர்கள் ஆவர்.

இதேநேரம், சாலிஹாவின் கடைசி சகோ தரரான இம்ரான், நீர்நிலை போட்டிகளில் ஒன்றான வோட்டர் போலோ வீரர்களின் வீரராக உள்ளார்.

சாலிஹாவின் ஆரம்பம் 12,13 மற்றும் 14 ஆகிய வய துப் பிரிவுகளில் இலங்கையின் முதல் நிலை கனிஷ்ட டென்னிஸ் வீராங்கனையாக வலம்வந்த பாத்திமா சாலிஹா, 2012இல் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட டென்னிஸ் போட்டிகளில் இலங்கையை முதல் தடவையாக பிரதிநி தித்துவப்ப டுத்தி பெண்களுக்கான இரட்டையர்

பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏழு வயது முதல் ஸ்குவாஷ் விளை யோடிய சாலிஹா, தனது 11ஆவது வயதில் டென்னிஸ்

விளையாட்டுக்கு மாறினார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் மாறினார். தனது 9ஆவது வயதில் கனிஷ்ட ஸ்குவாஷ் சம்பியனாக வலம்வந்த சாலிஹா, 11ஆவது வயதில் இரண்டா வது இடத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 13ஆவது மற்றும் 15ஆவது ஆகிய வயதுப் பிரிவுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 17 மற்றும் 19 ஆகிய வயதுப் பிரிவில் தேசிய ஸ்குவாஷ் சம்பியனாகத் முடிசூனார்.

அதன்பிறகு தேசிய மட்ட திறந்த ஸ்குவாஷ், போட்டிகளில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய் யப்பட்ட தேசிய மட்ட ஸ்குவாஷ் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பாத்திமா சாலிஹா, இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தி னால் நடத்தப்பட்ட ஸ்குவாஷ் போட்டியிலும் சம்பியனாகத் தெரிவானார்.

இதேநேரம், எஸ்.எஸ்.சி கழகத்தினால் வரு டாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற தேசிய மட்ட ஸ்குவாஷ் போட்டியில் கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் பெண்கள் பிரிவில் அவர் சம்பியனாகத் தெரிவானார்.

இந்த அனைத்து வெற்றிகளுடன் பாத்திமா சாலிஹா தற்போது பெண்கள் பிரிவில் இலங்கை யின் முதல்நிலை ஸ்குவாஷ் வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

சர்வதேச வெற்றிகள் தனது 15ஆவது வயதில் பாகிஸ்தானின் காரச்சியில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ், சம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பெற் றுக் கொண்ட பாத்திமா சாலிஹா, அதன்பிறகு 2016இல் குவைட்டில் நடைபெற்ற சிரேஷ்ட வீரர்களுக்கான ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் பில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதனையடுத்து கடந்த வருடம் தென்கொரி யாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ், குழுநிலை சம்பியன்ஷிப் போட்டியில் 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணியின் உறுப்பி னராகவும் இருந்தார்.

அதேபோல, கடந்த வருடம் இந்தோனேஷி யாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பெண்களுக்கான தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் பங்குகொண்ட பாத்திமா சாலிஹா, காலிறுதிக்கு முந் தைய சுற்றுவரை முன்னேறியிருந்தார்.

SAG போட்டிகள் 

2016ஆம் ஆண்டு இந்தி யாவின் குவஹாத்தியில் நடை  பெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பெண்க ளுக்கான தனிநபர் மற்றும் குழுநிலைப் போட்டிகளில் பங்குற்றிய பாத்திமா சாலிஹா, குழுநிலைப் போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல, இவ்வருடம் தேயாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தனி நபர் பிரிவில் காலிறுதி வரை முன்னேறிய அவர், பெண்களுக்கான குழுநிலை ஸ்குவாஷ் போட்டி யில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாத்திமா சாலிஹா வின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் சமூகவலைத் தளங்கள் ஊடாக வைரலாகப் பரவியது. இதற்கு பலரும் பல்வேறு விதத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த புகைப்படம் குறித்து பேசிய சாலிஹா, முதலில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வெல்லக் கிடைத் தமை தொடர்பில் மிகவும் சந்தோப்பட்டேன்.

நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம்களாக போட் டிகளில் பங்குபற்றினாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள்.

அதேபோல, எனது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி யதும், அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித் திருந்தனர். அந்தப் புகைப்பட்டம் இவ்வருடம் மலேஷியாவில் நடைபெற்ற சிரேஷ்ட வீரர்களுக் கான ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் போட்டியின் போது எடுக்கப்பட்டது. அதை நான் எனது முகநூலில் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். 

ஆனால் அது எவ்வாறு வெளியில் சென்றது என்பது எனக்கு இதுவரை தெரியாது.

எனவே, தெற்காசிய விளையாட்டு விழாவில் எனது போட்டி முடிந்து மறுநாள் காலை எழுந்து கையடக்கத் தொலைபேசியைப் பார்த்த போது தான் இந்தப் புகைப்படம் அனைவரும் மத்தியி லும் சென்றதை நான் பார்த்தேன். 

உண்மையில் எனது புகைப்படத்துக்கு இலங் கையில் உள்ள அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து வாழ்த்து தெரிவித்தி ருந்தனர். இதைப் பார்க்கும் போது சந்தோத்தின் உச்சத்துக்கு சென்றேன். அதிலும் எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்த சந்தோத்தை கொடுத்தது.

ஓர் இலங்கையராக நான் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை அனைத்து இலங்கையர்களும் கொண்டாடியிருந்தனர். கடந்த காலங்களில் நாட் டில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்கு எனது வெற்றியானது மன ஆறுதலைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

இலங்கை விளையாட்டில் முஸ்லிம்

பெண்கள்.. இலங்கையின் விளையாட்டுத்துறையில் முஸ் லிம் பெண்களின் வகிபாகம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி பேசிய பாத்திமா சாலிஹா,

இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றிதான் நாம் இந்த உலகில் வாழ வேண் டும். இதில் பெண்களுக்கு என்ற பிரத்தியேக சட்டத்திட்டங்கள் காணப்படுகின்றன. அதை நாங்கள் மீறவே முடியாது. அதேபோல, இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் விளையாட்டில் ஈடுபட டக்கூடாது என்று சொல்லவே இல்லை. எமது சாஹபிப் பெண்கள் யுத்த களம் சென்று போர் செய்தார்கள். வாள் சண்டைகளில் தேர்ச்சி பெற்ற பல சஹாபிப் பெண்களின் வாழ்க்கை வரலாறு களை நாங்கள் படித்துள்ளோம்.

எனவே, நான் ஒரு முஸ்லிம். அதுவும் இலங் கையில் பிறந்த முஸ்லிம் பெண். என்னிடம் விளையாட்டுத் திறமை உண்டு. அதனால் தான் நான் இன்று தேசிய ஸ்குவாஷ், சம்பியனாக உள் ளேன். எனவே மார்க்கத்தின் படி நான் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் விளையாடுவேன். அதிலும் இலங்கை பெண்ணாகத் தான் தான் போட்டியிடுவேன். இதன்மூலம், எனது சமூகத் துக்கும், இலங்கைக்கும் பெருமையைத் தேடிக் கொடுப்பேன் என்றார்.

அதேபோல. என்னைப் போல பல திறமையான முஸ்லிம் வீராங்கனைகள் இலை மறை காயாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். அந்த பொறுப்பை பெற்றோர்கள் தான் முன்நின்று செய்ய வேண்டும்.

5 கருத்துரைகள்:

There is another Girl from nawalapitiya (YAMEENA RIFZ)she won the bronz medal in judo ...no one knows plz find her too

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

congratulation SINGA PENNE...

Post a Comment