Header Ads



இந்த ஆபத்தான போக்கு குறித்து, ஜனாதிபதி கோத்தபாய அவசரமாக கவனமெடுக்க வேண்டும்

இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எடுத்­து­ரைத்தே  ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்­றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிஷாத்  பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மீண்டும் சஹ்­ரானை அர­சியல் ரீதியில் சந்­தைப்­ப­டுத்த முடி­யாது என்­பதால் அவர்­க­ளுக்குப் புதிய இலக்­குகள் தேவைப்­ப­டு­கி­றது. ஆகையால் அதற்கு தன்­னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­மையும் இலக்கு வைப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கொழும்பில் இடம்­பெற்ற வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பின்போதே அவர்­ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், எங்­களை ஆட்­சி­யா­ளர்கள் இலக்கு வைப்­பது தவ­றா­னது. நாங்கள் ஜன­நா­யக ரீதியில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள். நாம் எந்­த­வ­கை­யிலும் சஹ்­ரானைப் போன்­ற­வர்­க­ளல்ல.

'ஆட்­சி­யா­ளர்கள் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் வெற்றி பெற்­றார்கள். அவர்கள் விரும்­பி­ய­படி அமைச்­ச­ர­வையை அமைக்­கலாம். அது அவர்­களின் உரிமை. அவர்கள் எங்­க­ளையும் இலங்­கை­யர்­க­ளாகக் கருதி சமத்­து­வ­மாக நடத்­தினால் அதுவே எங்­க­ளுக்­குப்­போதும்.

வில்­பத்து வனத்தை நான் அழித்­த­தாக  என்­மீது வீண்­பழி சுமத்­து­கி­றார்கள். எனது அதி­கா­ரத்தைத் துஷ்­பி­ர­யோகம் செய்து வில்­பத்து சர­ணா­ல­யத்தின் எந்­த­வொரு பகு­தி­யையும் நான் அழிக்­க­வில்லை. 1990ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் அக­திகள் தங்­க­ளது சொந்த நிலங்­களில் மீளக்­கு­டி­யே­று­வ­தற்கு 2009ஆம் ஆண்டு வாய்ப்­புக்­கி­டைத்­தது.

 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று  இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தல்­களை அடுத்து தோன்­றிய சூழ்­நி­லை­களில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளான நாம் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்தோம். பொலி­ஸாரும், இர­க­சியப் பொலி­ஸாரும் எனக்கும் அந்தப் பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் தொடர்­பி­ருக்­கி­றதா என்று கண்­ட­றிய விசா­ர­ணை­களை நடத்­தி­னார்கள். சஹ்­ரா­னுடன் எனக்குத் தொடர்­பி­ருக்­கி­றது என்று அதி­கா­ரிகள் சந்­தே­கித்தால் என்­ மீது விசா­ரணை நடத்­துங்கள் என்று வெளிப்­ப­டை­யா­கவே நான் அறி­வித்தேன்.

 எனக்­கெ­தி­ராக முறைப்­பா­டு­களைச் செய்­வ­தற்கு இர­க­சியப் பொலிஸார் ஒரு­வார கால­ அ­வ­கா­சமும் வழங்­கினர். இது சகல ஊட­கங்­க­ளிலும் வெளி­வந்­தது. உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்கள் தலை­மை­யி­லான மூன்று விசா­ர­ணைக்­கு­ழுக்­களை பொலிஸ்மா அ­திபர் நிய­மித்தார். உத்­தி­யோ­க­பூர்வ விசா­ர­ணைகள் இறு­தியில் உயிர்த்த  ஞாயி­று­தின தாக்­குதல் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கும், எனக்­கு­மி­டையில் எந்தத் தொடர்­பு­களும் இருந்­தி­ருக்­க­வில்லை என்று நிரூ­பித்­தன. இது­பற்றி சபா­நா­ய­க­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

புத்­த­ளத்தில் வசிக்கும் அக­திகள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு மன்­னா­ருக்கு பஸ்­களில் பயணம் செய்­தது குறித்து என்­மீது போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவர்கள் புத்­த­ளத்தில் வாழ்ந்­தாலும் அவர்­களின் வாக்­குப்­ப­திவு மன்­னா­ரி­லேயே இருக்­கி­றது. தாங்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு வச­தி­யாக உகந்த முறையில் வாக்­காளர் இடாப்பில் தங்­களைப் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­த­ம­ரி­டமும் அவர்கள் வேண்­டுகோள் விடுத்­தார்கள். இலங்கைப் போக்­கு­வ­ரத்­துச்­சபை பஸ்­களில் அந்த வாக்­கா­ளர்­களை புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்ல என்னால் ஏற்­பாடு செய்­ய­மு­டி­யுமா என்று நான் நிதி­ய­மைச்­ச­ரிடம் அனு­மதி கேட்டேன். அதற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

வட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்பும், அதே­போன்ற போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­வ­தற்கு அனு­மதி கேட்டு எமது அமைச்­சிடம் வேண்­டுகோள் விடுத்­தது. அந்த அமைப்பு பஸ் கட்­ட­ணங்­களைச் சேக­ரித்து எமது அமைச்சு கொடுத்­தி­ருந்த பணத்தை உகந்த முறையில் மீளச்­செ­லுத்­தி­யது. அதற்­கு­ரிய முழுச்­செ­ல­வுமே செலுத்­தப்­பட்­டு­விட்­டதால் எமது அர­சாங்­கத்­துக்கோ அல்­லது அமைச்­சுக்கோ செலுத்த வேண்­டிய கட்­ட­ணங்கள் என்று நிலு­வை­யாக எது­வு­மில்லை. இந்தப் போக்­கு­வ­ரத்து ஏற்­பாட்டைச் செய்­தி­ருக்­கா­விட்டால் 12 ஆயிரம் வாக்­கா­ளர்கள் தமது வாக்­கு­களைப் பதி­வு­செய்ய இய­லாமல் போயி­ருக்கும்.

தனது பிர­ஜைகள் அவர்­களின் வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எப்­போ­துமே உத­வ­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். புத்­தளம் அக­திகள் விட­யத்தில் இலங்கை மக்­க­ளுக்கோ அல்­லது அர­சாங்­கத்­துக்கோ எந்­தச்­சு­மையும் இல்­லாமல் வாக்­கா­ளர்­களைப் புத்­த­ளத்­தி­லி­ருந்து மன்­னா­ருக்கு கொண்­டு­செல்­வ­தற்­கான முழுச்­செ­ல­வையும் வட­மா­காண இடம்­பெ­யர்ந்த அக­திகள் அமைப்­புடன் இணைந்து நாம் பொறுப்­பேற்றோம்.

நானொரு சிறு­பான்­மை­யி­னத்தின் அர­சியல் தலை­வ­ராக இருக்­கின்ற கார­ணத்­தினால்தான் என்னை இலக்­கு­வைத்து இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன என்­பது எனக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கின்­றது. எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு விரும்­பத்­த­காத சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் என்­னையும், எனது சமூ­கத்­தையும் பகிரங்கமாக தொல்லைகளுக்கு உள்ளாக்குகின்றார்கள்.

நாட்டில் இனக்கலவரத்தைத் தூண்டிவிடு வதற்கே அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகப் புலனாகின்றது.

நாட்டில் புதிய ஜனாதிபதியொருவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருக்கும்போது அவர்கள் இவ்வாறு செயற்படுவது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். புதிய ஜனாதிபதிக்கும், அவரது உயர்ந்த அந்தப் பதவிக்கும் அவர்கள் எந்தவொரு மதிப்பையும் கொடுக்கவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.  இந்த ஆபத்தான போக்கு குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ்ஷ கவனத்திலெடுக்க வேண்டும் என்று அவசரமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. I Disagree with this statement

    ReplyDelete
  2. Ajan Go in front of Mirror and say the above statement...

    ReplyDelete
  3. அஜன், நான் வாக்களித்த தலைவன் நாட்டை ஆளுகின்றார்.ஆனால் நீரோ எங்களது படையினர் அடித்த அடி தாங்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறி பதுங்கியிருக்கும் பாசிச சருகு புலி.
    உமக்கு விசர் பிடித்தால் கடலிலே விழுந்து செத்துப்போ! மற்றவன் குண்டியை முகர்ந்து பார்க்க வராதே!
    உமது புலித் தலைவனின் தலைவிதியே உனக்கும் இடம் பெறலாம். மூளை கவனம்,

    ReplyDelete
  4. @Ajan,
    ஆமா இவரு பெரிய ஐ.நா சபை செயலாளரு.
    சொல்லிட்டாரு Disagree யாம்.

    ReplyDelete
  5. அஜன் நீங்க முஸ்லிம்கள் விடயத்தில் எதில் தான் agree ஆகியிருக்கீங்க?

    ReplyDelete
  6. IN THE AFTERMATH OF JUNE 14th., ALUTHGAMA, BERUWELA AND DHRGA TOWN VIOLENCE WHICH THEY WERE NOT THE CAUSE, RAUF HAKEEM, RISHAD BATHIUDEEN, ACJU, MCSL, NATIONAL SHOORA COUNCIL AND MUSLIM CIVIL SOCIETY BACK STABBED HE. MAHINDA RAJAPAKSA IN THE 2015 PRESIDENTIAL AND GENERAL ELECTIONS. WE ARE FACING THE BACK LASH OF THOSE ACTIONS IN 2019.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. WE HAVE GOT THE OPPORTUNITY NOW TO DO IT THROUGH THE SLPP, AS STATED BY STTORNEY-AT-LAW ALI SABRY, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.