Header Ads



அதாவுல்லாவினால் எனக்கு தைரியம் வந்தது - ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் புஷ்வாணமாகிவிட்டன

(ஐ. ஏ. காதிர் கான்)

   ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் புஷ்வாணமாகிவிட்டன. தேசிய காங்கிரஸின் துணிச்சலே என்னையும் தைரியமூட்டியது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவை தேசிய காங்கிரஸ் சரியாக அடையாளம் கண்டதுபோல், கொழும்பு மேயராக இருந்த காலத்தில், தானும் சரியாக அடையாளம் கண்டதாக,  வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

   "காந்தா சவிய" (மகளிர் சக்தி)  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைக் குழந்தைகளுக்கு கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள்  வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் (28)  நடந்த இவ்வைபவத்தில் ஆளுநர் முஸம்மில் மேலும் உரையாற்றும்போது, 

   பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ,  எதிர்காலத்தில் நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரென, கொழும்பு மாநகர சபையின் மேயராக இருந்தபோதே, நான் தீர்மானித்தேன்.

   தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்கும் வாய்ப்பு, கொழும்பு மேயராக நான் இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்தது.  பாதுகாப்புச் செயலாளராக இருந்து அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் கச்சிதமானவை. நேர்த்தியான வேலைகளைத் திட்டமிடுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அவர் சளைத்ததில்லை.கொழும்பு நகரின் அழகை அவதானித்தால், ஒரு டொபி சருகையைக் கூட வீதியில் வீசுவதற்கு மனம் முன்வராது. இது அச்சத்தினால் ஏற்பட்ட உணர்வல்ல. அழகினால் கவரப்பட்ட மனங்களின் வௌிப்பாடாகும்.இவ்வாறான செயல் வீரரை அடையாளம் கண்டு அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.  அதாஉல்லா முன்வந்தமை என்னையும் தைரியமூட்டியது. ஆனால், முஸ்லிம்களின் தலைவர்களெனக் கூறித்திரிவோர், எமது சமூகத்தைத் தொடர்ந்தும் தவறாகவே வழி நடத்துகின்றனர். வாக்குக ளுக்காகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கடமைப்பட்டதற் காகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தொடர்ந்தும் முஸ்லிம்களை ஏமாளிகளாக்குகின்றன.

   இங்குள்ள பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும்,  பெற்றோர் செய்த தவறுக்காக எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகளைப் பழிவாங்கக் கூடாது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு நாங்கள் அரசியல் பேதம் பார்ப்பதில்லை. எனினும், இனியும் எமது சமூகத்தை ஏமாற்ற வருவோர் பற்றி நீங்கள் தௌிவாக இருக்க வேண்டும். ராஜபக்‌ஷக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டிய முஸ்லிம் தலைவர்கள், இன்று வாயடைத்துப் போயுள்ளனர். 

பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்து வாழ்வதே சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பானது.பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள பெரும்பான்மையினர் தீர்மானித்ததன் பின்னர், முஸ்லிம்கள் முரட்டுப்பிடிவாதத்துடன் செயற்படுவது, எமது குழந்தைகளின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கிவிடும். "காந்தா சவிய" அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் 16 ஆவது தடவையாக இச்சிறப்புத் திட்டத்தை முன்னடெுத்துள்ளமை பாராட்டக்குரியது என்றார்.

5 comments:

  1. இந்த நூற்றாண்டின் முதற் தசாப்தங்களின் தூரநோக்குள்ள தலைவன் அதாஉல்லாஹ் என்பதை இன்னும் பலர் கூறத்தான் போகிறார்கள்.
    வாழ்க!

    ReplyDelete
  2. Time uku time ovaru kathai kathikum unmai muslim

    ReplyDelete
  3. முஸம்மில் என்ற எருமை குப்ருக்கும் நிபாக்குக்கும் கடைக்குப் போகிறான்.அதன்பின்னணி அவருடைய தொழிலைத் தக்கவைத்துக்கொள்வது தவிர சமூகத்துக்கோ நாட்டுக்கோ அவரால் எந்தப் பயனும் கிடையாது என பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.

    ReplyDelete
  4. VERY GOOD SPEACH. WELLCOME
    MR, MUZAMMIL. KEEP IT UP.

    ReplyDelete
  5. தற்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் மாத்திரமல்ல தமிழ் மக்களுடனும் ஏன் சகல மக்களுடனும்ஒன்றிணைந்து நல்லிணக்கத்துடன் வாழவேண்டியது முஸ்லிம் மக்களின் பெரும் கடமையாகும் எப்படி பிரட்டிப் பிரட்டிப் பார்த்தாலும் இஸ்லாம் அதனைத்தான் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருக்கின்றது. இல்லை இல்லை நாங்கள் இப்படித்தான் இருப்போம் என முஸ்லிம் தலைவரகள் மக்களை திசை திருப்பினால் அதன் பலனை பாமர அப்பாவி மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இதனை ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டிய பொறுப்பு திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம்களுக்கே தார்மீகரீதியாக உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.