Header Ads



ரணிலை துன்பத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகளை, மகிந்த அரசாங்கம் முன்னெடுக்காது

எம்.சீ.சீ உடன்படிக்கைக்கு எதிரான, அரசாங்கத்தின் கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல்சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எம்.சீ.சீ உடன்படிக்கையில் கையெழுத்திடுவதை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கின்றது. நிபந்தனையின்றி அந்த முயற்சியை தோற்டிக்க வேண்டும்.

எம்.சீ. சீ உடன்படிக்கையை ஆராய தனியான குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

இதன் மூலம் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வந்த எதிர்ப்பு போலியானது என்பது புலனாகியுள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு முன்னர் காட்டிய எதிர்ப்பு காரணமாக அதில் கையெழுத்திட முடியாத சிக்கலில் அரசாங்கம் இருந்தது.

குழுவை நியமித்து காலம் தாழ்த்தி, மக்களின் கண்களை முடிவிட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட அரசாங்கம் தயாராகி வருவதை காணமுடிகிறது.

மத்திய வங்கியின் பிணை முறி சம்பந்தமாக அரசாங்கம் கடந்த காலத்தில் காட்டிய அக்கறையை காட்டவில்லை.

ரணில் விக்ரமசிங்க துன்பங்களுக்கு உள்ளாகும் அவர் சிக்கிக்கொள்ளும் செயற்பாடுகளை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் என நினைக்க முடியாது.

இதனால், ரணிலை காப்பாற்ற கூடிய வகையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிணை முறி மோசடி என்பது ரணில் விக்ரமசிங்கவுக்கு மட்டுமே ஏதுவானதல்ல.

ரணிலின் அரசாங்கத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் அதிகார தரப்புக்கும் பிணை முறி மோசடியில் தொடர்புள்ளது.

இதனால், பிணை முறி திருடர்களை சரியாக பிடித்தால் இரண்டு தரப்பில் உள்ளவர்களும் சிக்குவார்கள். இதன் காரணமாக அதனை மூடி மறைத்து மக்கள் மறந்து போக செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுவதை காண முடிகிறது.

இப்படியான பிரச்சினைகளில் மக்களுக்கு நியாயம் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.