Header Ads



சஜித் தாமதம் காட்டுவது ஏன்..?

சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி தலைவராகியும் பதவியை பொறுப்பேற்க தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசேடமாக சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கிய குழுவினர், அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற்றுக் கொடுக்க கடுமையான முயற்சி மேற்கொண்டனர். எனினும் சஜித் தனது கடமையை பொறுப்பேற்க பின்வாங்குவது கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயற்பாடு அவரை சுற்றியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு மிகப்பெரிய அநீதியாகும். இதனால் உடனடியாக எதிர்க்கட்சி தலைவராக சஜித் தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தற்போது எதிர்க்கட்சி தலைவருக்கான அலுவலகமும் சஜித்திற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. எனினும் சஜித் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்படுத்துவதற்கு தாமதம் ஏற்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி தேர்தல் தோல்வியில் இருந்து இன்னமும் அவர் மீண்டு வராமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் சஜித் கடுமையான நம்பிக்கையில் இருந்த போதும், அது நடக்காமையினால் அவர் தொடர்பில் பின்வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி தலைமைத்துவம் இன்றி எதிர்க்கட்சி தலைவர் பதவி மாத்திரம் பெற்றுக்கொள்ள நேரிட்டமையும் சஜித்தின் பின்வாங்கலுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.