Header Ads



கம்மன்பில, வீரவங்ச, மகிந்த ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும்

ஜனாதிபதித் தேர்தலின் போது பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தினால், எம்.சீ.சீ. உடன்படிக்கையினால் நாடு பிளவுபடும், நாடு அமெரிக்காவின் காலனியாக மாறும் என பொய் பிரசாரங்களை செய்த உதய கம்மன்பில, விமல் வீரவங்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் செய்தியாளர் சந்திப்பில் அல்லது மேடைகளில் கூறும் விடயங்களின் அடிப்படையில், அவற்றின் உண்மை, பொய் என்ற காரணத்தை கொண்டு வழக்கு தொடரப்படுமாயின் நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் தவறான விடயத்தை கூறியதாக வரலாற்றில் என்றும குற்றவியல் வழக்குகள் தொடரப்படவில்லை. அப்படியான வழக்கை தொடர குற்றவியல் தண்டனை சட்டத்தில் எந்த ஏற்பாடுகளும் இல்லை எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.