Header Ads



மழைக்காலத்தில் மரக்கறி விலையேறுவது வேடிக்கையானது, டாக்டர்களைவிட விவசாய அறிவுடையோரே நாட்டிற்கு தேவை

நாட்டில் வைத்தியர்களை விடவும், விவசாய துறைசார் அறிவுடையோர் அதிகம் தேவைப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

விவசாய துறைசார் நிபுணர்களை உருவாக்க வேண்டியது அவசியமெனவும்,  அவ்வாறானவர்களை உருவாக்குவதற்கான ஒரு கற்கை நெறியை ஆரம்பித்து, அதற்கான பட்டமொன்றை வழங்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

நாட்டில் மரக்கறி விலை அதிகரிப்பு தொடர்பாக தான் தேடிப்பார்த்த போது மழைக் காரணமாகவே மரக்கறி விலை அதிகரிக்கின்றதென தெரிவித்த அவர்,  பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சினை எட்டியிருக்கு நாட்டில் மழைக்காலத்தில் மரக்கறி விலை அதிகரிப்பது வேடிக்கையானது என்றார். 

அதனால் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாய துறையை பலப்படுத்துவதற்கு உதவும் அதிகாரிகளே அதிகம் தேவைப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.