Header Ads



மீண்டும் முன் பிணை, மனுவ தாக்கல் செய்தார் ராஜித

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் பிணை மனுவினை மீண்டும் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த  நவம்பர் 6 ஆம் திகதி, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் இருவருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி,  கொலை, வெள்ளை வேன் கடத்தல், சித்திரவதை, கொள்ளை உள்ளிட்ட  தகவல்களை வெளிப்படுத்திய விவகாரத்தில் இருவரை சி.ஐ.டி. கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

அந்த விவகாரத்தில், கைதான இருவரும் , அவர்கள் ஊடக சந்திப்பில் கூறிய விடயங்களை திருத்தி மீள கூற முற்பட்டால் உண்மையிலேயே வெள்ளை வேனில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அச்சுறுத்தியதாக, சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதாக சி.ஐ.டி. நீதிமன்றிக்கும் அறிவித்துள்ளது. 

அத்துடன் அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் உள்ள இருவருக்கு தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ராஜித்தவே செயற்பட்டுள்ளதாகவும்  சந்தேக நபர்களின் வாக்கு மூலங்கள் ஊடாக சி.ஐ.டி. மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்த விசாரணைகளை  சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவான் அசங்கவின் கீழ்  விசேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள நிலையில் ராஜித சேனரனத் நேற்றைய தினம் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன் பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.  

இந்த  மனுவானது இன்றைய தினம் பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதனை கொழும்பு தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன நிராகரித்தார்.

இந் நிலையில் ராஜித சேனாரத்ன மீண்டும் கொழும்பு நீதிவான் நீதமன்றில் முன் பிணை மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.