Header Ads



56 வயதில் சட்டக் கல்லூரியில் பயில, தயாராகிறார் ரஞ்சன்

சட்டக் கல்லூரியில் பயில்வதற்கு எந்த தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

56 வயதான ரஞ்சன் ராமநாயக்க சட்டத்தரணியாகும் நோக்கில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதியிருந்தார்.

2019ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதிய அவர், பரீட்சை பெறுபேறுகளை தனது பேஸ்புக் கணக்கு ஊடாக நேற்று பகிரங்கப்படுத்தியிருந்தார்.

அதற்கமைய அவர் அரசியலில் S சித்தியையும், ஊடக பிரிவில் S சித்தியையும், கிறிஸ்தவத்தில் F சித்தியும், ஆங்கிலத்தில் A சித்தியும் பெற்றிருந்தார்.

சட்டக் கல்வியை தொடர இந்த பெறுபேறுகள் போதுமானதா? மீண்டும் உயர்தர பரீட்சை எழுதுவீர்களான என ரஞ்சன் ராமநாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தான் சட்ட கற்கை மேற்கொள்வதற்காகவே உயர் தரப்பரீட்சை எழுதியதாகவும் தனக்கு கிடைத்த பெறுபேறு சட்ட கற்கை மேற்கொள்வதற்கு தடையை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வதற்கான பரீட்சை எழுதுவதற்கு ரஞ்சன் ராமநாயக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.