December 17, 2019

டுபாயில் கைதான 3 சிங்களவர்களும் முஸ்­லிம்­க­ளுக்கோ, இஸ்­லாத்­திற்கோ எதி­ரா­க கருத்­து­ வெ­ளி­யி­ட­வில்லை.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வா­தி­களின் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட டுபாயில் பணி­பு­ரியும் மூன்று இலங்­கை­யர்­க­ளுக்கு எதி­ராக அந்­நாட்டில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இலங்கை அர­சாங்கம் தலை­யிட்டு அவர்­க­ளுக்கு உயிர் பாது­காப்பை உறு­தி­செய்ய வேண்டும் என கலா­நிதி ஓமல்பே சோபித தேரர் தெரி­வித்­துள்ளார்.

எல்­பி­லி­பிட்­டி­யவில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது. இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் தொடர்பில் சில கருத்­துக்­களைப் பதி­வு­செய்த டுபாயில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாகப் பணி­பு­ரியும் மூன்று இலங்­கை­யர்­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸாரால் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் 22 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. என ஊட­கங்கள் வாயி­லாக அறி­யக்­கி­டைத்­தது.

இந்த தாக்­குதல் அப்­பாவி மக்கள் மீதே மேற்­கொள்­ளப்­பட்­டது. சமா­தா­னத்தை விரும்பும் உலக மக்கள் அனை­வரும் இதனை எதிர்த்­தனர். இந்த மூன்று இலங்­கை­யர்­களும் வெளி­யிட்ட கருத்­துக்­களும் சாதா­ர­ண­மா­னவை.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவோ இஸ்­லாத்­துக்கு எதி­ரா­கவோ நாமும் அந்த மூன்று இலங்­கை­யர்­களும் கருத்­து­வெ­ளி­யி­ட­வில்லை. சம­யத்தின் பெயரால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வா­தத்­தையே அவர்கள் எதிர்த்­தார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு எதி­ராக வெளி­யிட்ட கருத்­துக்கள் இஸ்­லாத்­துக்கு எதி­ரான கருத்­தாக எவரும் கரு­தக்­கூ­டாது.

வழக்கின் தீர்ப்பு எவ்­வாறு அமையும் என எம்மால் கூற­மு­டி­யாது. என்­றாலும் அர­சாங்கம் என்ற வகையில் இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யி­டலாம். டுபா­யி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்­டுள்­ள­தாக நான் அறி­கிறேன். டுபாயில் பணி­பு­ரியும் மூவரும் இலங்­கையில் ஏழைக்­கு­டும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். அவர்கள் தங்கள் குடும்­பத்தைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக அந்­நாட்­டுக்குச் சென்­றுள்­ள­வர்கள். எமக்கு அந்­நிய செலா­வ­ணியைப் பெற்றுத் தரு­ப­வர்கள். இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்குப் பங்­க­ளிப்­புச்­செய்யும் இவர்கள் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­த­வேண்டும்.

டுபா­யி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரிகள் இவர்­க­ளுக்கு நியா­ய­மான தீர்ப்பு கிடைக்­கப்­பெ­று­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்டும். அமெ­ரிக்­காவில் அல்­கைதா தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­போது ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் போதெல்லாம் உலக முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­களும் எதிர்ப்பு வெளியிட்டார்கள். அது போன்ற ஒரு தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட போது அதனை எதிர்த்தமை தவறல்ல. அவ்வாறு எதிர்ப்பு வெளியிட்ட இலங்கையர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் வராத வகையில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

5 கருத்துரைகள்:

தாக்குதலக்கு எதிரான கருத்துகளை வெளிட்டு இருந்தால் அவர்களை AC Flight ல் அனுப்பிவைப்பார்கள்.

நாங்களும் தான் தாக்குதலுக்கு எதிராக கருத்து வெளியிட்டோம். அப்போ ஏன் எங்கள கைது செய்யல்ல.
பொழப்புக்கு போன இடத்துல வாய வெச்சிக்கி சும்மா இருந்தா என்ன.

எனக்கு ஒரே ஒரு கவலை அங்கே பொழப்பிற்காக ஒட்டகம் மேய்க்க போன எத்தனையோ தமிழ் பயங்கரவாதிகள் இஸ்லாத்திற்கு எதிராக கேவலமான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு துதிராக புகாரளிக்க முஸ்லிம்கள் முன் வராதது வேதனையளிக்கிறது

Oh! Mr Monk. Then Fist tell Lankan Government to release all the innocent prisoners inside the jail i mean innocent not Terrors.

Ohh idiot monk, always you talk like this and against muslim, now you are trying to lie , they are bloody anti muslim racist, they will get maximum punishment, if you would be there
you would also be one of them,

Post a comment