Header Ads



3 இலட்சம் முஸ்லிம்கள், ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவளித்துள்ளனர் - மஸ்தான்

ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மைக் கட்சிகள் எடுத்த முடிவும், அவர்களால் சிறுபான்மைச் சமூகங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாகவும் சிறுபான்மை சமூகங்களிடமும் பெரும்பான்மைச் சமூகங்களிடமும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கவலை தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான காதர் மஸ்தான் சிறுபான்மைச் சமூகங்கள் குறுகிய நாட்களுக்குள் உண்மையை உணர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

இவ்வார தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணலின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் இதனைத் தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி – ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியால் அந்தச் சமூகம் அச்ச உணர்வில் காணப்படுகின்றது. முஸ்லிம் வாக்களிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, வடக்கு கிழக்கு அபிவிருத்தி முடக்கம் இவைகுறித்து உங்களது பார்வை எவ்வாறானது? 

பதில்– சாதாரணமாக சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முற்றாக நிராகரித்தார்கள் என்ற குற்றச்சாட்டு சரியானதல்ல மூன்று இலட்சத்துக்கும் கூடுதலான முஸ்லிம்கள் அவருக்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் நாம் எதிர்பார்த்த அளவுக்கு சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது கவலையளிப்பதாகவே உள்ளது. முஸ்லிம் தலைவர்களால் அந்தச்சமூகம் தவறாக வழிநடத்தப்பட்டதே இதற்கான காரணமாகும்.  

இன்று சிறுபான்மைச் சமூகம் இதனை உணர்ந்து தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனை நான் எனது வன்னி மாவட்டத்திலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொண்ட மக்கள் சந்திப்புக்கள் மூலம் அறிந்து கொண்டேன் முஸ்லிம் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களை தவறாக நடத்தினர். இதனை அந்த மக்களே என்னிடம் நேரடியாக எடுத்துச் சொன்னார்கள். 

வட, கிழக்கு அபிவிருத்தி என்பது 2015முதல் துளியளவும் இடம்பெறவில்லை. யார் எந்த விதமாக காட்ட முற்பட்டாலும் வடக்கிலோ, கிழக்கிலோ எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை என்பதை அந்த மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இங்கு வெறும் வாக்குறுதிக் கலாசாரம் தான் நடந்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உரிய திட்டம் வகுத்து உரிய நிதியை ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்கச்சார்புமற்ற விதத்தில் அந்தந்தப் பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளூடாக அபிவிருத்தித்திட்டங்களை அடையாளப்படுத்தி பணிகளை துரிதப்படுத்த உறுதிபூண்டுள்ளோம். இதற்கு சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச திணைக்களங்களை உள்வாங்கி ஜனநாயக முறையில் வெளிப்படைத்தன்மையோடு இதனை முன்னெடுக்கவுள்ளோம். 

அத்துடன் நீண்டகாலத்திட்டம், குறுகிய காலத்திட்டம் என்ற அடிப்படையில் பொறுத்தமான விதத்தில் இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தடைப்படுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அரசு தீர்மானித்துள்ளது. 

கேள்வி – தமிழ், முஸ்லிம் தரப்புகளை இணைந்து செயற்பட வருமாறு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ச விடுத்திருக்கும் அழைப்புக்குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? 

பதில் – ஜனாதிபதியின் இந்த பகிரங்க அழைப்பை தமிழ் முஸ்லிம் தரப்புகள், கட்சிகள் என்ற குறுகியவட்டத்துக்குள் வைத்துப் பார்க்க முற்படவில்லை. அன்னாரது அழைப்பு தமிழ், முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்களுக்கு விடுத்த அழைப்பாகவே நோக்குகின்றேன். தேர்தலின் போது இரண்டு சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதை பரவலாகவே பார்க்க முடிந்தது. 

தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் கிராமமட்டத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்தேன். தாங்கள் தவறாக வழி நடத்தப்பட்டதால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்ததைக் கண்டுகொண்டேன். 

இன்று அவர்களனைவரும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர். இணைந்து செயற்படத்தயாராக உள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். நடந்த சம்பவத்தை கனவாக நினைத்து மறந்து. இனி நடக்கவேண்டியதை கவனிப்போம். அனைத்துச் சமூகங்களையும் இணைத்துக் கொண்டு ஆட்சியை கொண்டு நடத்தவே ஜனாதிபதியும், பிரதமரும் விரும்புகின்றனர். இந்த நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்டு நாம் ஒன்று படவேண்டும். சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற பேத மின்றி அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட வேண்டும். 

கேள்வி – நீண்டகாலமாகவே மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? 

பதில் – வடக்கு, கிழக்கு மக்களதும், பொதுவாக நாட்டுமக்களதும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டியுள்ளதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது. 

இந்தப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்ந்து அதற்கான செயற் திட்டங்களை உள்வாங்கி தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவுள்ளோம். மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு வட பகுதியில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகாணப்பட வேண்டும். காலத்துக்குக்காலம் ஒட்டுப்போட்ட தீர்வுகளைவிட நிரந்தரமான தீர்வாக அமைய வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். 

கேள்வி – பெரும்பான்மைச் சமூகத்துக்கும், சிறுபான்மை சமூகங்களுக்குமிடையிலான விரிசலை தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என நினைக்கின்றீர்கள்? 

பதில் – தேர்தல் காலங்களில் தனிநபர் விமர்சனங்கள் எல்லை மீறியதாகக் காணப்பட்டது. இது இனங்களுக்கிடையே முரண்பாடானநிலையை உருவாக்கியது. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியது. இதனால் இனங்களுக்கிடையே வெறுப்புணர்வும் அதிகரித்தது. இதனை இல்லாமல் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. புரிந்துணர்வு மிக முக்கியமானது. மக்களை வழிநடத்தும் தலைமைத்துவங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். 

இனங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தக் கூடியவிதத்தில் கருத்துக்கள் அமைத்துவிடக் கூடாது. கடந்த காலத்தில் பெரும்பான்மைச் சமூகமும், சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பெரும் மன உளைச்சல்களுக்குள்ளானார்கள். மதரீதியிலான செயற்பாடுகளே இந்த மன உளைச்சல்களுக்குக் காரணமாக அமைந்தன. இதனை இல்லாமற்செய்து இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க நாம் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இனங்களை ஒன்றுபடுத்தி இனமத பேதமற்ற இலங்கையர்களாக அனைவரையும் மாற்றுவதற்கான கொள்கையைக் கொண்டவராக காணப்படுகின்றார். 

அவரது இந்த கோட்பாட்டுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதையும் காணமுடிகிறது. அவர் பதவியேற்ற அன்றைய தினமே விடுத்த அழைப்பு நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. 

கடும் போக்காளர்கள் பல நாடுகளிலும் காணப்படுகின்றனர். இங்கும் அதே நிலைதான் ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் கடும் போக்காளர்கள் விடயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். முரண்பாடுகளை தோற்றுவிப்போர் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றார்கள். 

பல்லின மக்கள் வாழும் நாட்டில் மிகவும் நிதானப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. சகல சமூகங்களையும் ஒன்றுபடுத்துவதில் சிரமம் இருக்கவே செய்கின்றது. ஆனால் சமாதான சகவாழ்வைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை இணைந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. 

கேள்வி – இறுதியாக சமூகத்துக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? 

பதில் – பல்லின மக்கள் வாழும் நாட்டில் நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களை மதித்து நடக்க முன்வரவேண்டும் பொறுமையை பேண வேண்டும் இவைதான் மிக முக்கியமானவையாகும். கருத்து முரண்பாடுகள் வரும்போது அவற்றை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. விரோதப் போக்குகளை தவிர்க்க வேண்டும். 

மனித உரிமைகளை மதிக்கவும், பேணி நடக்கவும் பழகிக்கொள்ள வேண்டும் மனித உரிமை மீறல்கள் காரணமாகவே மனித உரிமை ஆணைக்குழு உருவாகும் நிலை ஏற்பட்டது. இனம், மதம் மொழி கடந்து மனிதர்களாக நாம் மாறவேண்டும். அதன்மூலமே இந்த மண்ணில் அமைதியும் சமாதானமும், சகவாழ்வும் ஏற்படமுடியும் முஸ்லிம்களான எம்மிடம் இஸ்லாமிய வாழ்க்கைமுறை வரவேண்டும். இஸ்லாத்தில் உள்ள இணைந்து வாழும், இணங்கி வாழும் நிலையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.   

3 comments:

  1. இந்தக் கதைகளை விட்டுவிட்டு எப்படி ஜனாதிபதியை முஸ்லிம் சமூகத்துக்குச் சார்பாகவும் அவர்களுக்கு இந்த அரசாங்கம் மூலம் நன்மை இல்லாவிட்டாலும் தொந்தரவு இன்றி வாழ்வதற்கு எவ்வாறு அரசைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி சாதுர்யமாக பேச்சுவார்த்தை நடாத்தி காய்நகர்த்தல் பணிகளை முன்னெடுக்குமாறு இந்த பாராளுமன்ற அங்கத்தவரை முஸ்லிம் சமூகம் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன். தயவு செய்து பேச்சைக் குறைந்து செயலில் தீவிரமாக இயங்குங்கள்.

    ReplyDelete
  2. By the Grace of God AllMighty Allah - "The Muslim Voice" predicted in the run-up to the Presidential Elections of November 16th., 2019 that HE. Gotabaya Ralapaksa will get 38% of the Muslim Vote Bank of nearly 950,000, Insha Allah. Our indication was 380,000 Muslim votes for HE. Gotabaya Rajapaksa. We stand on it strongly.
    The Muslim Voice" made that prediction based on the "POLITICAL COMMUNICATION RESEARCH" analysis "The Muslim Voice" did concerning the behaviour of the Muslim Vote Bank since the incidents of April 21st., and the hoodwinking manner in which our Muslim so-called leaders and politicians behaved. ALHAMDULILLA, today it is happ to learn from a Muslim MP from Wanni (Mannar) expressing to the Tamil Media that 300,000 Muslims voted HE. Gotabaya Rajapaksa at the elections, Insha Allah. THIS HAS MADE US PARTNERS WITH THE MAJORITY COMMUNITY TO CREATE A STRONG PRESIDENT AND A VETRAN PRIME MINISTER TO DEFEND AND SAFEGUARD OUR "MAATHRUBOOMIYA" FOR OUR NEXT GENERATION TO LIVE IN PEACE, HARMONY AND DIGNITY IN THE FUTURE, Insha Allah. "The Muslim Voice" prays God AllMIGHTY ALLAH that he should give hidayath to the 950,000 Muslim Vote Bank to vote Muslim/Sinhalese SLPP candidates in the next general elections to be held in April/May 2020. This will enable the SLPP (Gotabaya + Mahinda + Basil) government to get more than 2/3 majority in the new government, Insha Allah. The Muslims can then become "PARTNERS" in a big way in the march forward of the Nation, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. He is begging for a position
    poor fellow

    ReplyDelete

Powered by Blogger.