Header Ads



ரிஷாத் பதியுதீனுக்கு 300 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு - சிங்கள ராவய

முன்னைய அரசாங்கத்தைப்போல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசும் அதிகாரத்தை பறிகொடுக்க வேண்டிவரும் என சிங்கள ராவய அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த அஅமைப்பின் தலைவர் அக்மிமன தயாரதன் தேரர்

“ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு ஆதரவளித்த பொலிஸ் அதிகாரிகள் இன்னமும் அதிகாரத்தில் இருக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தவறிழைத்தவர்கள் இன்னமும் சிறையில் இருக்கின்றார்கள். எனினும் தவறை செய்ய உத்தரவிட்டவர்கள் இன்னும் வெளியில் இருக்கின்றார்கள். இவை இரண்டுமே தவறுதான். ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய, இப்ராஹிம் என்பவரின் மகன்களுக்கு கூடுதலான அளவு செப்புவினை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரிஷாட் கைது செய்யப்படவேண்டும்.

இந்த அரசாங்கமும் என்ன செய்கின்றது என அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களும் முன்னைய அரசாங்கத்தைப்போல் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடின் அதிகாரத்தை இழக்க வேண்டியேற்படும்.

பின்னர் இது தொடர்பில் பேசி பிரியோசனமில்லை. அதிகாரம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், அறிவும் இருக்க வேண்டும். சில தலைவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன் மூளையில்லாமல் போகும்.

அதுதான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நடந்தது. அந்த நிலைக்கு இந்த அரசாங்கமும் செல்லக்கூடாது. சிரமத்திற்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தோம்.

ஆகவே ரிஷாத் பதியுதீன் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு நபர் அல்ல, இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்த்தோம்.

எனினும் அது நடைபெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவருக்கு 300 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை, எதிர் கட்சி தலைவராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு தற்போது எந்த அடிப்படையில் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

4 comments:

  1. சிங்கள ராவயவிடம் அதிக புலனாய்வு தகவல்கள் இருப்பதாக தெரிகிறது.இவர்களை தீரவிசாரிக்கின்ற போது நாட்டில் நடைபெற்ற, நடைபெறுகின்ற ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்களைப் பெறமுடியும்.
    தீர்ப்புக்களையும் விரைவாக பெறலாம்.

    ReplyDelete
  2. Appa ungalukku....1000 years???

    ReplyDelete
  3. Intha sinhala raawaya ....iwaru neradiya wisaarikkanum iwaridam nerayya information irikki...iwaruda job a sariya seyraaru...srilankan CID commissions ellaam waste.....iwaru solratha naadu seyyanum....
    Athu sariyo pilayyo....

    ReplyDelete
  4. So criminal monks like you get 500 years plus death penalty, ha ha

    ReplyDelete

Powered by Blogger.