Header Ads



இலங்கையில் 30 இலட்சம் நாய்கள், வருடாந்தம் 61000 நாய்களுக்கு கருத்தடை

இலங்கைக்குள் சுமார் 30 இலட்சம் நாய்கள் இருப்பதாக பொது சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் எல்.டி.கித்சிறி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நகரில் நடைபெற்ற “நீர் வெறுப்பு நோய் இல்லாத எதிர்காலம்” தேசிய நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

வருடாந்தம் 61 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் ஒரு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்த ஆண்டு நாய் கடிக்கு உள்ளான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 500 நீர் வெறுப்பு நோய் தடுப்பு ஊசி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

நீர் வெறுப்பு நோய் தடுப்புக்காக இந்த ஆண்டு 12 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நீர் வெறுப்பு நோய் காரணமாக இந்த ஆண்டில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான நாய்கள் இருக்கின்றன என்பதுடன் கிழக்கு மாகாணத்திலேயே குறைந்தளவில் நாய்கள் இருப்பதாகவும் கித்சிறி குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.