Header Ads



கலகெதர ஜப்பாரின் பழைய மாணவர் ஒன்றுகூடல் – 2019


கண்டி மாவட்டத்தில் 117 வருட வரலாற்றைக் கொண்ட கலகெதர ஜப்பார் கல்லூரியின் பழைய மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர் நலன்விரும்பிகள் பங்கேற்ற ஜப்பார் நடை பவனி மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 28ம் திகதி கல்லூரியில் விமர்சியாக நடைபெற்று முடிந்தது.

ஜப்பார் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலும்  கல்லூரி அதிபர் ஜனாப் பஸால் மொஹமட் அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வரலாறு காணாத அளவு பங்கேற்பு காணப்பட்டதாக பழைய மாணவர் சங்க உல தலைவர் நளீம் ஷியாம் குறிப்பிட்டார்.

கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் பழைய மாணவ மாணவிகளின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், நிபுனத்துவ வைத்தியர் சிராஜ் யூனுஸ், இரசாயனவியல் பேராசிரியர் வஸீர் உட்பட பலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல் - றிஸ்மி ராஸிக். கலகெதர





1 comment:

  1. Some one has come to walk with lungi.. it's so funny..

    ReplyDelete

Powered by Blogger.