Header Ads



2019 ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின்னரான, இலங்கை இஸ்லாமியர்களின் அரசியல் பயணம்

முஸ்லிம் அரசியல்  கட்சிகளில் பெரும்பாலான ஆதரவாளர்களைக் கொண்டு முதன்மை வகிக்கும் முஸ்லிம்காங்கிரசின் அரசியல் பயணத்தை பார்க்கும்போது மர்ஹூம் அஷ்ரப் அவகளின் அரசியல்  பயணமும் அவரின் எதிகால திட்டங்களும் தற்போதைய அரசியலில் அது எவ்வாறான தாக்கங்களை ஏப்படுத்தும் என்பதில் கட்சியின் அடிமட்ட உறுப்பினரும் அவருடன் மிகநெருக்கமாக கடைசிப் பத்து நாட்கள் கூடவே இருந்தவன் என்றவகைல் அவரின் கடைசி நகர்வுகள் சிந்தனைக்குட்பட்டவைகளில் எனது பார்வை 

             1981.09.21ம் திகதி அவரின் சிந்தனையில் இருந்து வெளியேகொண்டுவரப்பட்ட முஸ்லீம்களின் அரசியல் பயணம் எனும் தேவை இஸ்லாமியர்களின் உரிமைகளை சிறுகச் சிறுக பெற்றுக் கொள்வதற்கு வழிகோலியது JR.ஜெயவர்த்தனாவின் அரசியல் அமைப்பு முறை இலங்கையில் வாழும் சகல இனமக்களுக்கும் அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு துணைபுரிந்தது அந்த அரசியல் அமைப்பை சரியாக விளங்கிக்கொண்ட அஷ்ரப் அவர்கள் காளதில் குறித்து பலசாதனைகள் செய்தார் அதில் முக்கியமான ஒன்றுதான் 121/2% வெட்டுப்புள்ளியை 5% ஆக்கியது  அதன் மூலமாக சிறுபான்மை பாரளமண்ற உறுப்பினர்களின் மட்டுமல்ல தமிழ் பாரளமண்ற உறுபினர்கள் JVP யின் பாரளமண்ற உறுப்பினர்களின் எண்ணிகை போன்றவற்றை குறிப்பிடமுடியும் 

                           காலப்போக்கில் SLMCன் பயணத்துக்கு இனச்சாயம்புசும் வேலைகளை பெரும்பான்மை சமுகத்தினர் கைகொள்ளலாகினர் இவ்விடயம் அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் இன்னுமொரு பரிமானத்தை கொண்டுவந்தது மாத்திரமல்ல இனரிதியாக விடயத்தை அணுகுவதைவிட பொதுவானவிடயமாக அணுகும்போது சாயம்பூசுபவர்களின் எண்ணிக்கையிலனை குறைப்பதுடன் மேலதிக அதிகாரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் ஏனைய இரு இனங்களையும் தங்களுடன் இணைதுக்கொள்ளமுடியும் என்ற சிந்தனையும் தன்னுள் துளிர் விட்டது.

       அந்தசிந்தனையின் வெளிப்பாடாகவே தேசிய ஐகியமுன்னணி என்ற ஒரு அரசியல் கட்சியை (NUA) 2000மாம் ஆண்டு காலப்பகுதில் ஆரம்பித்துவைக்கப்பட்டது இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிலைக்கு அவரின் 2000மாம் ஆண்டின் சிந்தனை தீர்வாக அமைந்து நிர்க்கின்றது அவரின் மறைவுக்குப்பின்  ஏற்ப்பட்ட பதவிப்போட்டிகாரணமாக ஒற்றுமைப்பட்ட முஸ்லீம் சமுகம் பல்வேறு குழுக்களாகவும் கூறுகளாகவும் பிரிந்து தனது அரசியல் பலத்தை இளக்க ஆரம்பித்தது இவ்வாறான இழப்பு முஸ்லீம் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தையும் அழிவுக்குள்ளாக்கியுள்ளது ஒற்றுமையே எமது பலம் யாவரும் ஒற்றுமைப்பட்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்துவந்த அக்குரல் அடங்கிவிட்டபோது முஸ்லீம் சமுகம் சரியான தலைமைத்துவம் இன்றி நட்டாற்றில் வீழ்ந்துகிடக்கின்றது.

 கல்வியலாளர்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் விரட்டப்பட்டு கட்சி அனதையாக்கப்பட்டுள்ளது கட்சியினை உருவாக்கிய கிழக்குமண் சோபை இழந்து காணப்படுகின்றது அடிமட்டத் தொண்டர்கள் மனம் நொந்து அவர்களின் வேதனைக்கோசங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் சுயநல அரசியலை விட்டு சமுகத்தை ஒற்றுமைப்படுத்தி  ஒருகுடைன்கீழ் ஒண்றுசெர்க முன்வரவேண்டும் முஸ்லீம் பெயர்களில் இயங்கும் கட்சிகள் ஒன்றுசேர்ந்து தேசியரீதியாக அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட (NUA) வின் கீழ் ஒன்றுபடுவதன் மூலமே எதிர்காலசமுகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றி வைக்கமுடியும் தங்களது கட்சிகளை கலைக்கவேண்டிய அவசியமில்லை ஒன்றுபட்டு இயங்குவது மட்டுமே எமதுபணியாகும் பதவிகளை துக்கிவீசுங்கள் சமுகத்தை ஓற்றுமைப்படுத்துங்கள்.

 சமுகத்துக்கு ஏர்ப்பட்டுக்கொண்டிருக்கின்ற எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால்களுக்கு அது தீர்வாக அமையும்  கட்சியின் உயர்பீடங்களில் புதுமுகங்கள்தான் காணப்படுகின்றன மனம்நொந்துபோயுள்ள அடிமட்ட நிருவுனர்களை அழைத்து பழைய கோபதாபங்களை மறக்கச்செய்து ஒற்றுமைப்படுதுங்கள் சகலரதுமனங்களும் குளிர்மையடையவேண்டும்இறைவன்பெயரால் ஒற்றுமைப்படுதுங்கள்  காலடிக்குச்சென்று அவர்களை அழையுங்கள் சகலரும் ஒற்றுமைப்படுவதன் மூலமே எமது இழந்த அரசியல் உரிமைகளை இறைவன் நிவர்த்திசெய்துதருவன் என்ற மனஉறுதியுடன் முன்வாருங்கள் அஷ்ரப் அவர்களின் சிந்தனை எக்காலத்துக்கும் பொருத்தமானது (NUA) யாரிடம் உள்ளதோ அவரிடம் கதையுங்கள் அவரையும் இணைத்துக்கொள்ளுங்கள் இதுதான் எமதுஅரசியல் இயக்கத்தின் சிறந்த சிந்தனை வாதியல் சூட்டப்பட்டபெயர் இப்பெயருக்கு என்றும் அழிவு இல்லை. இக்கட்சியை அவர் (TRANSASIA HOTEL) ல் அறிமுகப்படுத்திய ஆரம்ப உரையை கேளுங்கள் அவைகள் பத்திரப்படுத்தப்பட்ட ஆவணமாக கட்சியிடம் இருக்கும் அந்த உரையின் முக்கியமான வார்த்தை.

அந்த  நிகழ்வில் கலந்துகொண்டவன் என்றவகையில் நினைவில் உள்ளது அந்த வார்த்தைதான் இது SLMCக்கு பிறந்த குழந்தைதான் இந்த NUA இக்குழந்தைதான் எதிகாலத்தில் எமது பொக்கிஷம் காலபோக்கில் இக்குழந்தையின் தாய் மௌதகிவிடுவார்கள் அத்தாயை நாம் வழியனுப்பிவைபோம். எதிர்காலத்தில் NUAதான் எமதுபாதை. அவரின் அடிமனத்தில் இருந்துவந்த அந்த சிந்தனை இப்போது துளிர்விட ஆரம்பித்துள்ளது பேரினவதிகள் எவ்வாறு தமது எதிர்கால அரசியலை நகர்த்திச்செல்வது என்பதை எடுத்துக்கட்டிவிடர்கள்  எதிர்காலத்தில் பேரினிவாதஅரசியல்கட்சிகள் எல்லாம் இதையே கடைபிடிதுச் செல்வர்கள் எம்மைதேடி யாரும் வரப்போவதில்லை நமே நமக்கான வழிகளை தேடிக்கொள்ள வேண்டும். 

           ஏனைய இரு சமுகங்களும் அவர்களுக்குள் விமர்சனங்கள் செய்தாலும் தக்கநேரத்தில் ஒன்றுபட்டுவிடுவார்கள் ஆனால் முஸ்லீம் சமுகம் சமுக வலைத்தளங்களில் நடந்து கொள்கின்ற நாகரீகத்தை கண்டு இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்து எம்மை இன்னும் கூறுகூறாக்க காய்நகர்த்தல்களை செய்துகொண்டு வருகின்றார்கள் நாம் இந்தசந்தர்ப்பதில் நண்றாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
அல்ஹாஜ் ஏ எல் எம் மஸ்கூதுலெவ்வை(BA)JP.
முன்னாள் SLMC அமைப்பாளர்

5 comments:

  1. A political review of Muslim community must be done. All 22 political leaders must go home now and give space to some new leaders.

    ReplyDelete
  2. DO NOT WORRY THE NEW LEADER IN HARIS FROM KALMUNAI.VERY SOON HE WILL GIVE A SHOCKING BACK STAPING TO HAKKEM .

    ReplyDelete
  3. No need these people to home. Let them do the correct politics that benefited for Muslim community, and not for the self interest. A common powerful Politburo must be established with Muslim genius to guide and supervise their activities.

    ReplyDelete
  4. our muslim broker also didnot understand about his goal like Fowzi etc... still who are living minority in other place they are telling before we live with Sinhala, Kumara married Rishana, Nilanthi married Abdullah, we live together, but now we are facing several issues etc..... this is the most scattered muslim thought

    ReplyDelete

Powered by Blogger.