Header Ads



சூப் குடிக்கச் சென்றபோது 2 குழுக்களிடையே மோதல், 3 பேர் படுகாயம், ஆட்டோ கருகியது (படங்கள்)


மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க அருகிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரும் அந்த பகுதியைச் சேர்ந்த குழுவினரும் சென்ற நிலையில் இரு குழுக்களுக்கிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,  

குறித்த பிரதேசத்திலுள்ள சூப் கடைக்கு அருகிலுள்ள கூளாவடி பிரதேசத்தைச் சோந்த குழுவினர் முச்சக்கரவண்டியில்  நேற்று இரவு 7 மணியளவில் சென்றுள்ளனர் இதன்போது அங்கு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினர் சூப்குடிக்க சென்றுள்ளனர் 

இந்த நிலையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாய்தர்க்கத்தையடுத்து  மோதல் ஏற்பட்டது இதில் 3 பேர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டு தீயில் எரிந்து முற்றாக சேதடைந்துள்ளது. 

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து பொலிசார் அங்கு சென்ற நிலையில்  மோதலில் ஈடுபட்ட இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த மோதல் மதுபோதையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .




4 comments:

  1. இலங்கை மது, சூது ஆகிய இரண்டு பெரும் பாவங்களை சட்டபூர்வமாக்கியுள்ளது.மேலும் விபச்சாரத்தையும் மறைமுகமாக ஊக்குவிக்கின்றது.
    மது ஒவ்வொரு சிங்கள,தமிழ் பிரதேசங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதோடு சீட்டிழுப்பு/ லொத்தர் என்ற அடிப்படையில் சூது தலைவிரித்தாடுகின்றது.
    மசாஜ் என்ற போர்வையில் விபச்சாரம் ஊடுருவியுள்ளது.
    இவை மறைமுகமாகவும் நேரடியாகவும் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது.
    சமூக,அரசியல் தலைவர்களும் கல்வியியலாளர்களும் ஒன்றிணைந்து இவற்றை ஒழிப்பதற்கான அழுத்தங்களை வழங்குவது அவசியமாகும்.

    ReplyDelete
  2. அன்புக்குரிய மொகமட் லாபீர், மது கஞ்சா போதைவஸ்து மேலும் நீங்கள் குறிபிடும் குற்றச்செயல்கள் சிங்கள தமிழ் கிராமங்களில் மட்டுமா ஊடுருவி இருக்கிறது? நீங்கள் சொல்வது 100% உண்மையாயின் உங்களை கண்டிக்க முடியாது.

    ReplyDelete
  3. ஜெயபாலன் ஐயா,அரசு லைசன்ஸ் வழங்கிய மதுபானக் கடைகள் முஸ்லிம் பிரதேசத்தில் நிறுவப்படுவதில்லை என்பதும் இவற்றை அரசுடன் ஒட்டியிருக்கும் நபரகளுமே நடத்துகிறார்கள் என்பதும் முஸ்லிம்களும் அதன் வாடிக்கையாளர் ஆகிவிடுகிறார்கள் என்பதும் இதனை அனைவரும் சேர்ந்து தடுக்க வேண்டும் என்பதுமே எனது எழுத்தின் சாராம்சம் என்பதையும் நீங்கள் புரியாமலுமில்லை என்பதும் புரிகிறது.
    இருந்தாலும் ஏன் விமர்சித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  4. ஜெயபாலன் ஐயா!
    தமிழ் என்றால், தமிழ் மொழியைக்கொண்ட பிரதேசமென்று எடுத்துக் கொள் வோ மே!
    தமிழ் வேறு, முஸ்லிம் வேறல்ல.
    தமிழென்பது மொழி, முஸ்லிம் என்பது மதம்.
    முஸ்லிம்களும் தமிழர்கள்தான் தமிழில்.

    ReplyDelete

Powered by Blogger.