Header Ads



அரிசியை பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்கள் பற்றி 1977 என்ற இலக்கத்தில் முறையிடுங்கள்

அரிசியை பதுக்கி வைத்திருக்கும் மற்றும் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 1977 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு நுகர்வோர் அதிகார சபைக்கு  பொதுமக்களால் இந்த முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

அரசாங்கத்தின் உத்தரவாத விலையையும் விட கூடுதலான விலைக்கு  அரிசியை விற்பனை செய்த சுமார் 700 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அஷேல பண்டார தெரிவித்தார்.

ஒரு கிலோ சம்மா அரிசியின் உத்தரவாத விலை 98 ரூபாவாகும். இதையும் விட கூடுதலான விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

மோசடி வியாபாரிகளைத் தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 22 ஆயிரம் விற்பனை நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அஷேல பண்டார தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.