Header Ads



18 வயதிற்கு கீழ், திருமணம் செய்யமுடியாது - பாராளுமன்றில் சட்டம் வருகிறது

இனம்,மதம்,குல கோத்திரங்கள் என்பவற்றை தாண்டி இலங்கை திருமண சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருத்த சட்டமூலதிற்கு அமைய இந்த திருத்தமானது ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துஷிதா விஜயமான்ன முன்வைத்துள்ளார்.

எந்த இன, மதத்தவராக இருந்தாலும் ஆகக்குறைந்த திருமணமாகும் வயதெல்லை 18 ஆகும் அதே சமயம் இந்த வயதெல்லையை தாண்டாத எவருக்கும் திருமணம் செய்வதோ அல்லது செய்து வைப்பதோ சட்டதிற்கு முரணான செயலாகும்.

எனவே அவ்வாறான திருமணங்கள் இனிவரும் காலங்களில் செல்லுபடியற்றதாக கருதப்படும் அதேவேளை குறித்த வயதெல்லையை தாண்டாத எவரையும் திருமண பந்தத்தில் இணைய உதவி புரிவோரோ அல்லது கட்டாயப்படுத்துபவர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கந்த உடரட்ட திருமணம் (மத்திய மலை நாட்டு திருமணம் ) மற்றும் முஸ்லீம் மக்கள் இஸ்லாம் சட்டதிற்கு அமைய செய்யும் திருமணம் உள்ளிட்ட அனைத்து திருமணங்களும் இந்த சட்டத்திற்கு கட்டுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு செய்து வைக்கப்படும் திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியற்றவை என கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை மீறி திருமணம் செய்து வைக்கப்படுமாயின் அதுகுறித்து அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. மனித உரிமையை மீறிய சட்டம்

    ReplyDelete
  2. தேவிடியாலின் சட்டம்.

    ReplyDelete
  3. நல்ல சட்டம் வரவேட்க தக்கது வாழ்க சனாதிபதி

    ReplyDelete
  4. நல்ல தீர்மானம் ஆனால் விசேட தேவைகளின் போது அவ்வயதில் குறைந்தவர்கள் திருமணம் செய்ய சட்டச் சலுகைகள் இருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.