Header Ads



கோட்டா - ஹிஸ்புல்லா ஒப்பந்தமெனக்கூறி UNP வாக்குகளை பெற முயற்சி

கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சி காணொளி ஒன்றை தயாரித்து வெளியிடவிருப்பதாக, தேசிய சுதந்திர முன்னணி கூறுகிறது.

அதன் உபத்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக, சமுக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யும் நோக்கில் இந்த காணொளி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் வெற்றியை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.