November 10, 2019

கோத்தபாய ஜனாதிபதியானால் கிழக்கில் ஆளுநராகவும், முதலமைச்சராகவும் தமிழர் வருவார்கள் -

சுமந்திரன் என்னும் குள்ள நரி நேரத்துக்கு நேரம் சென்று ஐக்கிய தேசிய கட்சியிடம் பெட்டியை வாங்குகின்றார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று பெரியபோரதீவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவினை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், சந்திரகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

" கோத்தபாயவின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்கள் இந்த நாட்டில் நிம்மதியாகவும் பொருளாதாரத்துடனும் பாதுகாப்புடனும் வாழமுடியும்.

இன்று வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் வருங்கால ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவினை ஆதரிப்பதற்காக ஒன்றாக இணைந்திருக்கின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே இன்று வெளியே நிற்கின்றது. அதன் தலைவர் சம்பந்தர் ஐயாவுக்கு எதுவும் தெரியாது புத்திசாதுரியமற்றவராக காணப்படுகின்றார். சுமந்திரன் என்னும் குள்ள நரியே நேரத்துக்கு நேரம் சென்று ஐக்கிய தேசிய கட்சியிடம் பெட்டியை வாங்குகின்றார்.

13 கோரிக்கைகளை சம்பந்தர் கொண்டுவந்தபோது அதனை மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை, சஜித்தும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் உண்மையானவர்கள் என்றால் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். ஆனால் இன்று கோத்தபாய ராஜபக்ஸவினை தோற்கடிக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு சஜித்திடம் சென்றுள்ளனர். தமிழர்களை மீண்டும் குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையையே அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேரத்துக்கு நேரம் தமிழ் மக்களை ஏமாற்றிவருகின்றனர். நாங்கள் மிகவும் கவனமாக செயற்படும்போதே கிழக்கு மாகாண தமிழ் மக்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும்.

கோத்தபாய ஜனாதிபதியாக வரும்போதே கிழக்கில் ஆளுனராகவும் முதலமைச்சராகவும் தமிழர் வருவார்கள். பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக ஆக்கவேண்டும். கிழக்கு மாகாணசபையை அவரிடம் பாரமளிக்கவேண்டும். அப்போதே பாரிய அபிவிருத்திகளை காணமுடியும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தார்கள். 20ஆயிரம் கோடி ரூபா கொள்ளையடித்தார்கள். அதனைக்கொண்டே இன்று கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆயிரம் ரூபாவும் சோத்துப்பார்சலும் கொடுக்கின்றார்கள்.

இது மதுபானத்திற்காகவும் பணத்திற்காகவுமான தேர்தல் அல்ல, கிழக்கு மாகாணத்தில் எங்கள் உரிமையினை பாதுகாப்பதற்கான தேர்தல்.

இந்த நாட்டில் அனைத்து அரசாங்கங்களும் கொலைசெய்துள்ளதுடன் விடுதலைப்புலிகளும் கொலைசெய்தார்கள். யுத்தம் என்றால் அதுதான். ஆனால் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்வதற்கான சுத்திகரிப்பினை செய்த அரசாங்கம் இந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆகும்" என்றார்.

2 கருத்துரைகள்:

நாட்டுப் பிரச்சனைகளை பிறகு தீர்த்துக் கொள்ளலாம்,அதற்கு தகுந்தவர்கள் பலர் உள்ளனர் முதலில் உன் வீட்டுப் பிரச்சனையை தீர்க்கப்பாரு,உன் இரு பெண்டாட்டிகளும் மேடையேறி குடுமிச் சண்டை பிடிப்பதை முதலில் நிறுத்து.உனக்குத் தேவையா இந்த மானங்கெட்டபொழப்பு.

பசில் ராஜபக்ச வின் முன்னிலையில் கருணா அவர்கள் மறைமுகமாக முஸ்லிம்களை தாக்கி ஒரு இனவாத பேச்சை பேசியிருக்கிரார்.இதைப் பற்றி பொது ஜன பெரமுன Muslim பிரிவு மற்றும் அங்கே இருக்கும் எமது அரசியல்வாதிகள் மற்றும் அழையா விருந்தாளியாய் அங்கே இருக்கும் எமது உலகில் உள்ள அனைத்தும் அறிந்த உலமா (உலக்கை) முபாறக்,நீங்கள் அனைவரும் கருணா வின் பேச்சை ஆமோதிகின்ரீர்கலா இல்லையா என்பதை தெளிவுபடுத்தவும்.அப்படி தெளிவு படுத்தாவிட்டால் நீங்கள் அனைவரும் விலை போய் விட்டீர்கள் என்பதுதான் அர்த்தம்.

Post a Comment