Header Ads



இனவாதத்துக்கு தீனிபோட்டு வளர்த்தவர்கள், தேர்தலில் வெல்லுவதற்காக நம்மீது பரிவு காட்டுகிறார்கள்.

கடந்த காலங்களில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள் குறித்து சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

களுத்துறை, பேருவளை, தர்கா நகர், அட்டுலுகம மற்றும் பாணந்துறை- தொட்டவத்தை ஆகிய பிரதேசங்களில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றினார். 

இனவாதத்துக்கு தீனி போட்டு வளர்த்தவர்கள் தேர்தலில் வெல்லுவதற்காக நம் மீது பரிவு காட்டுகிறார்கள். அன்பை செரிகின்றனர். அரவணைக்கின்றனர். இந்த நடிகர்களின் பசப்பு வார்த்தைகளில் ஏமாறி விடாதீர்கள். பெறுமதியான வாக்குகளை சீரழித்து விடாதீர்கள். 

வர்த்தகர்கள் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு சமூகத்தின் ஏழ்மையை பயன்படுத்தி, பணத்தை கொட்டி வாக்குகளை பெறுவதற்கு பிரயத்தனம் செய்கின்றனர்.  மிகவும் தந்திரமாக நமக்குள் ஊடுருவி சாதிக்க பார்க்கின்றனர்.

பெரும்பான்மை இனத்தின் மனோநிலையை புரிந்து கொண்டு சிறுபான்மையினம்  வாக்களிக்க வேண்டும் என அச்சுறுத்தி பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு கொருகின்றனர். இந்த ஏஐண்ட்டுகளின் கூற்றில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை. இந்த கூட்டத்தினரின் கடந்த கால ஆட்சி, நிர்வாக முறை, ஜனநாயகம் தொடர்பான இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். முதல் ஐந்து வருடத்தில் காட்டிய நிதானம் அடுத்த ஐந்து வருடத்தில் காணாமல் போய் விட்டது. அதிகார மமதையும் வக்கிர புத்தியும் மேலோங்கியதையும் மறந்து விட மாட்டீர்கள். சிறுபான்மை மக்களை துளியளவும் கணக்கில் எடுக்காத இவர்களின் செயல்பாடு தான் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் உயிரூட்டியது.  

பேருவளை, அளுத்கமை தர்கா நகர்,  ஆகிய இந்த பிரதேசங்களே இந்த வாதங்களுக்கு முதலில் இரையானது. உங்களை இலக்கு வைத்து எல்லாவற்றையும் அழித்தனர் இதனால் உங்களின் துன்பங்களிலே ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் கவலை கொண்டது. கையேந்தி பிரார்த்தித்தது. கண்ணீர் வடித்தது. ஆனால் இங்குள்ள சில அரசியல் வாதிகள் அவற்றை எல்லாம் மறந்து உங்களை பிழையாக வழி நடத்த பார்க்கின்றனர். உங்களுக்காக குரல் கொடுத்த , அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் போராடிய முஸ்லிம் தலைமைகள் தொடர்பில் இந்த பிராந்தியத்தில் உள்ள மொட்டு அரசியல் வாதிகள் சிலர் சிங்கள மக்கள் மத்தியில் தவறான கருத்தை விதைக்கின்றனர். 

நாட்டின்  ஒருமைப்பாட்டை விரும்பியதனாலயே நான் உட்பட வடக்கு முஸ்லிம் சமூகம் அடித்து விரட்டப்பட்டோம் என்பதை மொட்டு முஸ்லிம்  அரசியல் வாதிகள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இவர்களின் பிழையான வழிகாட்டலுக்குள் சிக்கி விடாமல் சமூகத்தை முன்நிறுத்தி வாக்குகளை  அளியுங்கள்.

1 comment:

  1. "The Muslim Voice" wishes to repeat this again, Insha Allah.
    HOW TO BELIEVE THESE GUYS? THE MUSLIM VOTE BANK HAS TO BE ALERT NOT TO BELIEVE THESE MUNAAFIQUES, Insha Allah.THEY HAVE ACCEPTED CORRUPTION BETWEEEN THEMSELVES AT THE CABINET MEETINGS. Muslim voters should read below an example please:https://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick
    Here is a story of how united Rauf Hakeem and Rishad Batiudeen are?
    What a shame to the Muslim Community in Sri Lanka?
    (Please read the news below.)
    அமைச்சரவை கூட்டத்தில் கடுமையாக மோதிக் கொண்ட இரு அமைச்சர்கள் - Muslim ministers quarrel at cabinet meeting. (http://www.tamilwin.com/politics/01/121875?ref=editorpick)
    அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியூதீன் ஆகியோர் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது.
    கேள்வி மனு ஊழல், தரகு பணம் பெறுதல், ஊழல், மோசடி சம்பந்தமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கடும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    ஒரு அமைச்சர் நீ திருடன் எனக் கூற மற்றைய அமைச்சர் நீ பச்சை கள்ளன் என திட்டியுள்ளார்.
    வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜனாதிபதி நிறுத்துமாறு சில முறை கூறிய பின்னரே இருவரும் தமக்கிடையிலான வாக்குவாதத்தை நிறுத்தியுள்ளனர்.
    (English Translation).
    At the last cabinet meeting ministers Rauf Hakeem and Rishad Bathiudeen accused each others and were engaged in continuous arguments. This created chaos in the meeting. The discussion was regarding, corruption, bribery, allegations of dishonesty and kick-backs. Both (Muslim) ministers were heaping allegations at each other and accusing each other of being the most corrupt person (minister). When one minister accused the other as a thief (rouge)/”kallan”, the other minister accused him saying, you are the biggest thief (rouge)/”pachaikallan”.
    Only after the President making many interventions to stop this situation, both (Muslim) ministers stopped the allegations made at each other.
    NOTE:
    It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to CHASE AWAY THESE DECEPTIVE, DISHONEST and CORRUPT MUSLIM LEADERS/POLITICIANS to face any new election in the comming future, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.