Header Ads



ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டை பின்பற்றுவேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காவல்துறை அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டமையானது பிழையானது என்று ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் இராணுவத் தளபதியாக இருந்தவேளையில் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிக்கையை சமர்ப்பித்ததாக குறிப்பிட்ட அவர் எனினும் எவ்வித பயனும் இல்லை.

இதன் வெளிப்பாடே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலாகும் என்றும் மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் இடம்பெற்றபோது யார் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக இருந்தார் என்பதை கவனிக்கவேண்டும்.

இந்நிலையில் தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டை பின்பற்றப்போவதாக மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

6 comments:

  1. நேர்மையான அதிகாரி.இவர் சொல்வது மிகச் சரி.அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டும் என்ரே தெரிந்தும் தெரியாமல் இருந்த சிலரின் வேலைதான்.இல்லாவிட்டால் சஹ்ரான் எனும் பயங்கரவாதி தாக்குதல் நடத்தும் முன்பே அவனை கைது செய்ய எவ்வளவோ வாய்ப்பு இருந்தும்,வேண்டும் என்ரு கைவிடப்பட்டது.

    ReplyDelete
  2. அப்போ, முஸ்லிம் சட்டம் அம்போவா

    ReplyDelete
  3. விளங்கிடும்-ஆக மொத்தத்தில் எல்லோருக்கும் ஜனாதிபதியாக ஆக வேணும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டது - மர்சூக் மன்சூர் - தோப்பூர்

    ReplyDelete
  4. Ajan நீ மிகப் பெரும் இனவாதி என்பதை உனது கருத்துக்கள் மிகத் தெளிவாக காட்டுகின்ரன.உன்னைப் போல் இனவாதிகலை எந்த பொது மகனும் கனக்கே எடுப்பதில்லை.

    ReplyDelete
  5. கண்கெட்ட பின் சூரிய நமஸ்கராம்

    ReplyDelete
  6. தேசவழமை எனும் சட்டமொன்று தமிழ் மக்களுக்கு உள்ளது அஜனுக்குத் தெரியாது போல? நாங்கள் அதற்கும் ஆதரவாகத்தான் குரல் கொடுப்போம்

    ReplyDelete

Powered by Blogger.